விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள் – வைரலாகும் போட்டோஸ்
Kamal Haasan New Movie Update | உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் பணிகள் தொடங்கியதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 65 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் கமல் ஹாசன் நடிப்பில் இதுவரை 238 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் சினிமாவில் உலகதரம் வாய்ந்த பல விசயங்களை புகுத்தி மக்களுக்கு சினிமா மூலமாக புதுப் புதுப் அனுபவங்களை ஏற்படுத்தி கொடுத்த நடிகர் கமல் ஹாசனை ரசிகர்கள் உலக நாயகன் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வித்யாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ள நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனுக்கு கடந்த சில படங்கள் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் படங்களில் நடிப்பதில் மட்டும் இன்றி அதிக அளவில் படங்களை தயாரிக்கும் பணிகளிலும் நடிகர் துல்கர் சல்மான் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள்:
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிக்க உள்ள புதுப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் கமல் ஹாசன் தனது 239-வது படத்திற்காக இயக்குநர் எஸ்யு அருண் குமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் டெஸ்ட் ஷூட் நடைப்பெற்றுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு – வைரலாகும் பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Click of #KamalHaasan from the test shoot of #SUArunKumar film📸🔥
Trst shoot is currently in progress for the film !!
Official announcement of the film coming very soon (Likely today or tomorrow)⌛
Shooting to begin in few months 🎬
Expecting a Full on Action packed Commercial… pic.twitter.com/hhVeqTiaAl— AmuthaBharathi (@CinemaWithAB) September 3, 2026
Also Read… கார்த்தி – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் கமெர்ஷியல் படம்… வைரலாகும் தகவல்