AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா 66 ஆண்டுகளை நிறைவு செய்தது!

66 Years Of Kalathur Kannamma Movie | உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணமா படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 66 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன களத்தூர் கண்ணம்மா 66 ஆண்டுகளை நிறைவு செய்தது!
களத்தூர் கண்ணம்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2026 15:38 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆனால் கமல் ஹாசன் கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன்படி நடிகர் கமல் ஹாசன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் நாயகனாகவும் நாயகியாக  நடிகைசாவித்திரி கணேஷ் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 11-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1960-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 66 ஆண்டுகள் நிறைவடைந்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஏ.வி.மெய்யப்பன், குமரன் மற்றும் அருண் வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகரக்ளிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது.

களத்தூர் கண்ணம்மா 66 ஆண்டுகளை நிறைவு செய்தது:

இந்தப் படத்தில் தற்போதும் ரசிகர்களுக்கு நினைவிருக்கும் விசயம் என்ன என்றால் குழந்தை நட்சத்திரமாக கமல் ஹாசன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடலைப் பாடுவார். அந்தப் பாடல் தற்போதும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இன்றுடன் 66 ஆண்டுகள் நிறைவடைவது நடிகர் கமல் ஹாசனும் சினிமாவில் 66 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ரசிகர்கள் இதனை தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Also Read… அருண் விஜயின் 38-வது படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ

களத்தூர் கண்ணம்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சேயோன் பட ஷூட்டிங்கிற்காக மதுரை சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோ

Follow Us