AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Rajinikanth and Kamal Haasans Movie Shooting Update | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அப்டேட் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
ரஜினிகாந்த் - கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2026 11:12 AM IST

பான் இந்திய அளவில் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் இணைந்து நடிப்பது என்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதே மாதிரி தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு சில நடிகர்கள் இணைந்து நடிப்பதை பார்க்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது. அதில் ஒன்றுதான் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இவர்கள் இருவரும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்தப் படத்தின் மூலமாகதான் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கத் தொடங்குவதற்கு முன்பாக பலப் படங்களில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு கமல் ஹாசன் உடன் இணைந்து நடிப்பதை இருவருமே தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தா கமல் ஹாசனா என அவர்களின் ரசிகர்களிடையே போட்டி சண்டை ஏற்படும் அளவிற்கு இருவருக்கும் இடையே சினிமாவில் போட்டி நிலவி வந்தது. இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் பணிகள் வருகின்ற 2027-ம் ஆண்டுதான் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஜெயிலர் 2 படத்தின் பணிகளில் நெல்சன் திலீப் குமார் பிசியாக உள்ளார். அந்தப் படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் அதற்கான பணிகளே தற்போது நடைப்பெற்று வருகின்றது.

Also Read… Vijay Sethupathi: விக்ரம் படத்தில் எனக்கு மூணு பொண்டாடி வைப்பதற்கு காரணம் இதுதான் – கலகலப்பாக விஜய் சேதுபதி பகிர்ந்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதி ராஜா… இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

Follow Us