பெண்ணியம் சார்ந்த படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்? ஹீரோயின் இவர்தான்!
Lokesh Kanagarajs New Film Production: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்த்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்குநராக படங்களை இயக்குவதை கடந்து, தயாரிப்பாளராகவும் படைப்புகளை உருவாக்கிவருகிறார். இந்நிலையில் இவர் புதிதாக தயாரிக்கும் படம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) சினிமாவில் தற்போது பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். இயக்குநராக சினிமாவில் நுழைந்து, தயாரிப்பாளர், ஹீரோ மற்றும் இதர பணிகளையும் இவர் செய்துவருகிறார். இவர் ஹீரோவாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில் டிசி (DC) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இயக்குநர் மற்றும் ஹீரோ என்பதை தாண்டி மக்களுக்கான நல்ல கதைக்களம் கொண்ட படங்களை லோகேஷ் தயாரித்துவருகிறார்.
இவரின் தயாரிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த, 29 என்ற படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெண்ணியம் சார்ந்த புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளாராம். இப்படத்தை யார் இயக்குகிறார்?, யார் நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மா இன்டி பங்காரம் படத்தில் உண்மையிலே அவர்தான் நடிக்கவேண்டியது.. சமந்தாவே பகிர்ந்த விஷயம்!
பெண்ணியம் சார்ந்த படத்தை தயாரிக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களை தயாரித்துவருவதிலும் ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக 29 என்ற படமானது வெளியானது. இப்படம் திரையரங்குகளை கடந்தும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதையடுத்து தற்போது புது படத்தை தயாரிக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: என்னால் முடிந்தவரை.. தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்பேன் – அஜித் குமார்!
இப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நாயகியாக நடிக்கவுள்ள நிலையில், இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம்ப் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:
BUZZ – Alongside #AA23, #LokeshKanagaraj is also producing a women-centric movie on a first-copy basis through his company G-Squad for Mythri Movie Makers, in which #ReginaaCassandra is said to star ⭐️.
The film will be directed by Vishal Venkat (Sila Nerangalil Sila Manithargal,… pic.twitter.com/n9ir6b9MGU— Movies Singapore (@MoviesSingapore) June 8, 2026
லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜுனின் AA23 என்ற படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளாராம். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகவுள்ள நிலையில், படத்தின் மீட்டது எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது. இப்படம் லோகேஷின் LCU- படத்தொகுப்பில் ஒருபடமாக் உருவாக்கவுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகிறது.