Benz: பென்ஸ் பட ஷூட்டிங்கை எப்போது முடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.. அவரே கொடுத்த அப்டேட் இதோ!
Raghava Lawrence Benz Movie: லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் பென்ஸ். இப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொகுப்பில் 4வது படமாக தயாராகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை எப்போது முடிப்பார் என்பது குறித்து ராகவா லாரன்ஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் நடன இயக்குநராக, நடிகராக மற்றும் இயக்குநராகவும் மிகவும் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவர் தற்போது இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கத்தில் பென்ஸ் (Benz) படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) அவரின் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துவரும் நிலையில், இதன் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங்கில் ராகவா லாரன்ஸ் தீவிரமாக இருந்துவருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடிகர்கள் நிவின் பாலி (Nivin Pauly), சம்யுக்தா மேனன் மாட்டிரும் தற்போது ரவி மோகனும் இணைந்துள்ளார். இப்படம் LCU படத்தொகுப்பில் புது படமாக தயாராகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இதன் மீது அந்திம எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் (sai Abhyankkar) இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் எல்லாமே மாஸாக தயாராகியுள்ளதாம். மேலும் சமீபகாலமாக ராகவா லாரன்ஸ், இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூற்பட்டுவந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதத்தில் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பென்ஸ் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங்கை எப்போது முடிப்பார் என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: தனுஷின் மருமகனுடன் இணைந்து நடிக்கும் குஷ்புவின் மகள்.. வைரலாகும் புரோமோ வீடியோ!
பென்ஸ் படத்தின் ஷூட்டிங் குறித்து ராகவா லாரன்ஸ் சொன்ன விஷயம்:
நடிகர் ராகவா லாரன்ஸ், “தற்போது அவர் பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதாகவும், தனது கதாபாத்திரத்திற்காக படப்பிடிப்பை வரும் 2026 ஜூன் 10ம் தேதியோடு முடிவடைகிறதாகவும்” அவர் கூறியுள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் ராகவா லாரன்சும் அரசியலில் இறங்குகிறாராஎன ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கில்லர் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து… உயிரிழந்த மதன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய எஸ்.ஜே.சூர்யா!
பென்ஸ் படத்தின் ஷூட்டிங் குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026
நடிகர் ராகவா லாரன்ஸ் வெறும் சினிமா பிரபலமாக மட்டுமல்லாமல், சமூக ஆர்வலராகவும் இருந்துவருகிறார். பல ஏழை மாணவர்களை தனது அறக்கட்டளை மூலமாக தந்தெடுத்து வளர்த்துவருகிறார். சமூக பிரச்சனைகளிலும் அவ்வப்போது தனது கருத்துக்களையும் தெரிவித்துவருகிறார்.
இவர் இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக வட்டாரங்களில் செய்திபரவிவருகிறது. இதற்கான விளக்கத்தை வரும் 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியில் கூறுவதாகவும், புதிய மாற்றத்திற்கான முடிவு என பதிவு ஒன்றில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.