பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
Actor Ravi Mohan X Post Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தில் இணைந்துள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் 90களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவர் குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்து இருந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா (Director Mohan Raja) இயக்கத்தில் வெளியான ஜெயம் (Jayam Movie) என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். ரவி மோகன் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி.
இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அவரது கதாப்பாத்திரம் மக்களால் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து ரவி மோகன் நாயகனாக நடித்து உள்ள கராத்தே பாபு, ப்ரோ கோட் மற்றும் ஜீனி ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ள பென்ஸ் படத்தில் இணைந்துள்ளார்.




ராகவா லாரன்ஸிற்கு நன்றி கூறிய ரவி மோகன்:
அதன்படி ரவி மோகன் பென்ஸ் படத்தில் இணைந்தது குறித்து படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கு நன்றி தெரிவித்து ரவி மோகன் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகர் நிவின் பாலி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளதை முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உள்ளதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Also Read… முதலமைச்சர் ஜோசப் விஜயை புகழ்ந்து பேசிய நடிகர் ராம் சரண்
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you for the warm welcome master 😊 https://t.co/tIF7Fd1cja
— Ravi Mohan (@iam_RaviMohan) June 1, 2026