முதலமைச்சர் ஜோசப் விஜயை புகழ்ந்து பேசிய நடிகர் ராம் சரண்
Ram Charan congratulates Chief Minister Thalapathy Vijay | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தளபதி விஜய் முதலமைச்சரானதற்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகரான நடிகர் ராம் சரண் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சினிமாவில் இயக்குநரின் மகனாக நடிக்க வந்த நடிகர் விஜய் தொடர்ந்து தனது அடுத்தடுத்தப் படங்களில் நடிப்பை மெருகேற்றி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், தங்கை செண்டிமெண்ட் என ஒரு பீரியடில் விஜயின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் செண்டிமெண்டாகவே இருந்தது. இது அவரது சினிமா கெரியரில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல இடங்களில் உதவி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நாயகனாக வலம் வந்த நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் நாட்டில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய் வெற்றிப் பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தொடர்ந்து.
முதலமைச்சர் ஜோசப் விஜயை புகழ்ந்து பேசிய நடிகர் ராம் சரண்:
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண் முதலமைச்சர் ஜோசப் விஜயை பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக பெத்தி படம் தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன்படி சென்னையில் இன்று நடைப்பெற்ற புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராம் சரண் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அதனை விட்டுவிட்டு அரசியலில் களமிறங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… H Vinoth: ஜன நாயகன் எப்போ சார் வரும்? – இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!
இணையத்தில் வைரலாகும் ராம் சரண் பேச்சு:
I want to congratulate The Honourable Chief Minster #ThalapathyVijay who left his peak stardom to do social service for the people
– #RamCharan pic.twitter.com/eBSpcUFD9R— Movies Singapore (@MoviesSingapore) May 30, 2026
Also Read… Samantha: அதிரடி திருப்பங்களுடன்.. மா இன்டி பங்காரம் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – சமந்தா!


