AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: அதிரடி திருப்பங்களுடன்.. மா இன்டி பங்காரம் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – சமந்தா!

Samantha About Maa Inti Bangaaram: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகியுள்ள படம்தான் மா இன்டி பங்காரம். இப்படம் ஜூன் 19ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சமந்தா தெரிவித்துள்ளார்.

Samantha: அதிரடி திருப்பங்களுடன்.. மா இன்டி பங்காரம் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – சமந்தா!
சமந்தாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 May 2026 16:35 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களிலும் நாயகியாக நடிக்கவில்லை. இதை தொடர்ந்து இவரின் ரசிகர்களின் கோரிக்கைக்காக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மா இன்டி பங்காரம் (Ma Inti Bangaaram). இதை ஹோ பேபி திரைப்படத்தை இயக்கியிருந்த தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி (Nadhini Reddy), இப்படத்தையும் இயக்கியுள்ளார். இதில் சமந்தா அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் தமிழ் நடிகை கௌதமியும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சமந்தா ரூத் பிரபு லீட் கதாநாயகியாக சந்தித்துள்ள நிலையில், அவரே தயாரிப்பாளராகவும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் பேமிலி பேக்ரவுண்ட் கதையில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சமந்தா, மா இன்டி பங்காரம் படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கருப்பனின் பேயாட்டம்.. பரிமளா & கோ பட ரிலீஸ் தேதி மாற்ற காரணம் இதுதான் – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!

மா இன்டி பங்காரம் திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசிய சமந்தா ரூத் பிரபு:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சமந்தா, “இந்த மா இன்டி பங்காரம் படத்தில் பெண்களை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு அடைக்கப்படவில்லை. மக்கள் குறைத்து மதிப்பிடும் ஒருவரை மையமாக கொண்டு, அவரை அந்த படத்தின் மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரமாக மாற்றுக்குறது. இப்படத்தில் பல அதிரடி, திருப்பங்கள், பிரம்மாண்ட கதைக்களம், மீள்திறன் மற்றும் ஒரு குடும்பத்தை பற்றிய வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது” என அதில் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அரசன் படத்தில் சிம்புவின் ஜோடி அந்த நடிகையா? இணையத்தில் வைரலாகும் அப்டேட்

மா இன்டி பங்காரம் திரைப்படம் குறித்து சமந்தா பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

சமந்தாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகியுள்ள படம் என்ற நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு ஜூன் 19ல் இப்படம் வெளியாகும் நிலையில், வெற்றியடையும் என கூறப்படுகிறது.

Follow Us