AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: எனது ரகசிய பெயர்.. எனது கணவரும் அப்டித்தான் கூப்பிடுவாரு – சமந்தா சொன்ன ரகசியம்!

Samantha Secret Name: தென்னிந்திய மக்கள் மத்தியில் பேவரெட் நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் வெளியாகும் படம்தான் மா இன்டி பங்காரம். இப்படத்தின் விழாவின்போது பேசிய சமந்தா, தனது ரகசிய பெயர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Samantha: எனது ரகசிய பெயர்.. எனது கணவரும் அப்டித்தான் கூப்பிடுவாரு – சமந்தா சொன்ன ரகசியம்!
சமந்தா மற்றும் ராஜ்நிதி மோருImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 May 2026 17:52 PM IST

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தெலுங்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகியாக இருந்துவருகிறார். இவர் என்னதான் தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தாலும், இவர் வளர்ந்தது முழுவதும் தமிழகத்தில்தான். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் கதாநாயகியாக நடிக்கவில்லை. சில உடல்நிலை பிரச்சனைகளின் காரணமாக அவர் படங்களில் கதாநாயகியாக நடிக்காமல் இருந்தார். அதை தொடர்ந்து மாஸ் எண்ட்ரியாக இவர் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மா இன்டி பங்காரம் (Ma Inti Bangaaram). இதை நந்தினி ரெட்டி (Nandini Reddy) இயக்கியுள்ள நிலையில், சமந்தாவே தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது பிரம்மாண்டமான நடைபெற்றிருந்த நிலையில், அதில் தனது கணவர் ராஜ்நிதி மோருவுடன் (Raj Nidi Moru) சமந்தா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பேசியிருந்த சமந்தா, தன்னை வீட்டில் தனது கணவர் அழைக்கும் ரகசிய பெயர் குறித்து பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அர்ஜுனின் பிளாஸ்ட் படம் பிளாஸ்ட் ஆச்சா? இல்ல புஸ்ஸுன்னு போச்சா? விமர்சனங்கள் இதோ!

தனது ரகசிய பெயர் குறித்து வெளிப்படையாக பேசிய சமந்தா:

அந்த நிகழ்ச்சியின்போது கலகலப்பாக பேசிய சமந்தா ரூத் பிரபு, “எனக்கு வெளியே யாருக்கும் தெரியாத இன்னொரு பெயர் உண்டு. அதுதான் எனக்கு பொருந்துமென நானே வைத்த பெயர். நானே எனக்கு யசோதா என பெயர் வைத்துக்கொண்டேன். என் கணவருக்கும் அந்த பெயர் பிடித்துப்போக, வீட்டில் என்னை அவ்வாறுதான் அழைக்கிறார்” என அதில் சமந்தா வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்… ஆர்.ஜே.பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி

மா இன்டி பங்காரம் படம் குறித்து நடிகை சமந்தா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மா இன்டி பங்காரம் திரைப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லகர் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகை சமந்தா சாதாரண குடும்ப பெண்ணாக மட்டுமில்லாமல், அதிக அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இப்படமானது சமந்தாவிற்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us