AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: நகைச்சுவை மற்றும் ஆக்ஷன்… மா இன்டி பங்காரம் படம் இப்படிதான் இருக்கும் – சமந்தா!

Maa Inti Bangaaram Movie Story: சமந்தாவின் நடிப்பில் தெலுங்கு மொழியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் மா இன்டி பங்காரம். இது சமந்தாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 வருடத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்ற நிலையில், எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் கதைக்களம் பற்றி நடிகை சமந்தா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Samantha: நகைச்சுவை மற்றும் ஆக்ஷன்… மா இன்டி பங்காரம் படம் இப்படிதான் இருக்கும் – சமந்தா!
சமந்தாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 May 2026 18:07 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான குஷி (Kushi) படத்திற்கு பிறகு, கதாநாயகியாக எந்த படங்ககளிலும் சமந்தா நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. அந்த வகையில், இவரே லீட் நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). இதை ஹோ பேபி (oh Baby) படத்தை இயக்கியிருந்த நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்துள்ளது. மேலும் இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அதன்படி இப்படம் வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, தன்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள மா இன்டி பங்காரம் படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!

மா இன்டி பங்காரம் படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து சமந்தா தெரிவித்த விஷயம்:

அந்த நேர்காணலில் பேசியிருந்த சமந்தா, “நான் இதற்கு முன்பு நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் படங்களைத் தனித்தனியாக நடித்திருக்கிறேன், ஆனால் அவற்றை ஒருபோதும் ஒன்றாகக் கலந்ததில்லை. ஆனால் இந்த மா இன்டி பங்காரம் படத்தில், நாங்கள் இரண்டையும் கலந்திருக்கிறோம். பொதுவாக, ஒரு பெண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, ​​அதில் ஒரு சமூகக் கோணம் இணைக்கப்பட்டிருக்கும், அது அப்படத்தை மிகவும் தீவிரமானதாக மாற்றிவிடும்.

இதையும் படிங்க: சிறப்பாக தொடங்கியது சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங் – படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

ஒரு பெண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களுடன் பொதுவாக இணைக்கப்படும் அந்த வழக்கமான விஷயங்களிலிருந்து நாங்கள் விலகி, இதை மிகவும் வேடிக்கையாகவும், குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும்படியாகவும் வைத்திருக்க முயன்றோம். இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு படமும் கூட” என்று அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மா இன்டி பங்காரம் படம் குறித்து சமந்தா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

மா இன்டி பங்காரம் திரைப்படமானது பெண்ணியம் சார்ந்த அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். இப்படம் குடும்பத்துடன் பார்ப்பதற்கும் என்ற திரைப்படம். இந்நிலையில் இப்படம் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகிவருகிறது.

Follow Us