AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Peddi: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!

Peddi Movie Trailer: தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகாக் இருந்துவருபவர் ராம்சரண். இவரின் நடிப்பில் ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி விளையாட்டு திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் பெத்தி . இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Peddi: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!
பெத்தி படத்தின் தமிழ் டிரெய்லர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 May 2026 12:31 PM IST

தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே ஆர்.சி.16 என அறிவிக்கப்பட்ட திரைப்படம்தான் பெத்தி (Peddi). இந்த படத்தை உப்பனே, ரங்கஸ்தலம் போன்ற படங்களை இயக்கியிருந்த இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கியுள்ளார். இது ராம் சரணை வைத்து இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில் ராம் சரண் மல்யுத்த வீரனாகவும், கிரிக்கெட் வீரனாகவும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் (Jahnvi Kapoor) நடித்துள்ளார். இது இவர் தெலுங்கில் நடித்துள்ள 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெத்தி படமானது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுத்த கருப்பு படக்குழு.. தி ஒன் சூர்யாவின் கருப்பு பட இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ராம் சரணின் பெத்தி படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

பெத்தி திரைப்படத்தில் நடிகர் ராம் சரணின் கதாபாத்திரத்தின் பெயர் பெத்திதான். இதில் ராம் சரண் கிரிக்கெட், மல்யுத்தம் மற்றும் ரன்னர் போன்ற விளையாட்டு வீரனாக நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க விளையாட்டை மையப்படுத்தியே இயக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை ஜான்வி கபூர் ஒரு அடங்காத பெண்ணாக நடித்துள்ளார்.

சாதாரண மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பெத்தி எவ்வாறு உலகநாடுகளில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறார், அவரின் போராட்டங்கள் என்னென்ன என்பதை பற்றியே இப்படமானதும் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெகபதி பாபு, சிவராஜ் குமார் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை.. இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு

ராம் சரண் இப்படத்திற்காக கிட்டத்தட்ட 6 மாதமாக மல்யுத்தம் மற்றும் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகைகயில் இப்படத்தின் ட்ரெய்லர் சுவாரஸ்யமாக வந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us