AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுத்த கருப்பு படக்குழு.. தி ஒன் சூர்யாவின் கருப்பு பட இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Suriya Karuppu Movie: தென்னிந்திய சினிமா மற்றும் கோலிவுட் நாயகன் சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு படமானது திரையரங்குகளில் வெற்றிவாகை சூடிவருகிறது. அந்த வகையில் இப்படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுத்துவருகிறது. அது என்ன என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Karuppu: தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுத்த கருப்பு படக்குழு.. தி ஒன் சூர்யாவின் கருப்பு பட இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கருப்பு திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 May 2026 10:48 AM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) 45வது திரைப்படமாக வெளியாகியிருந்த படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது 2024ம் ஆண்டில் சூர்யா45 என டைட்டில் வைக்கப்பட்டு, கோவையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவந்த நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வகையில் கருப்பு என இப்படம் டைட்டில் வைக்கப்பட்டு, முழுமையாக மார்டன் உலகத்தில் ஒரு தெய்வம் வந்தால் என்ன நடக்கும் மற்றும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு என்ன செய்யும் என்பதை மையமாக கொண்டு இப்படமானது இயக்கப்பட்டிருந்தது. இதில் சூர்யா, திரிஷா (Trisha), ஷிவதா (Shivada), அனகா மாய ரவி, இந்திரன்ஸ் மற்றும் மெயின் வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). மேலும் ஆர்.ஜே.பாலாஜிதான் இப்படத்தை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2026 மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் எதிர்பாராத வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் முதல் நாளிலே ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இதையும் படிங்க: ரீல் டு ரியல்! கோட் பட நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த வெங்கட் பிரபு!

கருப்பு திரைப்படத்தின் 3வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கருப்பு படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் தெறிக்கவிட்டுவரும் நிலையில், எவ்வளவு வசூலித்திருக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. அந்த வகையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 14 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இதனை தொடர்ந்து 3 நாட்களில் உலகமெங்கும் சுமார் ரூ 147 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.

இதையும் படிங்க: சேயோன் படத்திற்காக தமிழ் கற்றுவருகிறேன்.. தமிழில் தீவிரமாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து படக்குழு வெளியிட்ட கருப்பு பட டைட்டில் கார்ட்:

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களுக்கெல்லாம் சூப்பர் சுற்ற, உலகநாயக்க, தல மற்றும் தளபதி என ரசிகர்கள் கொடுத்த அடைமொழி இருக்கும் நிலையில், சூர்யாவையும் ரசிகர்கள் சிலர் நடிப்பு அரக்கன் என அழைப்பதுண்டு. அந்த வகையில் ரெட்ரோ படத்திற்கு பிறகு ரசிகர்களால் சூர்யா தி ஒன் என அழைக்கப்பட்டுவருகிறார். அதையே கருப்பு படத்தின் டைட்டில் கார்டில் “தி ஒன்” சூர்யா என வைக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அந்த டைட்டில் கார்டு வீடியோவை ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார்.

Follow Us