Bhagyashri Borse: சேயோன் படத்திற்காக தமிழ் கற்றுவருகிறேன்.. தமிழில் தீவிரமாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!
Bhagyashri Borse About Seyon Movie: தெலுங்கு சினிமாவின் மூலமாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் தற்போது தமிழில் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்திற்காக தமிழ் கற்பது மற்றும் படத்தில் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் பேசியுள்ளார்.
டோலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashree Borse). இவர் விஜய் தேவரகொண்டாவிற்கு (Vijay Devarekonda) ஜோடியாக கிங்டம் (Kingdom) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அந்த வகையில் இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை மையமாக கொண்டு வெளியாகியிருந்த காந்தா (Kaantha) படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்து னது ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த வரிசையில் முழுவதுமாக தமிழ் படமாக இவரின் நடிப்பில் தயாராகவுள்ளதுதான் சேயோன் (Seyon). இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கவுள்ள நிலையில், கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சேயோன் படத்தில் நடிப்பதற்காக, அவர் தமிழ் கற்றுவருவதாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த விஷயம் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: 2001ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% ஜெயிச்சிருப்பேன் – அரசியல் குறித்து பேசிய ரஜினிகாந்த்
சேயோன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் பேசிய விஷயம்:
அந்த நேர்காணலில் பாக்யஸ்ரீ போர்ஸ் பேசுகையில், “சேயோன் திரைப்படத்திற்காக தமிழ் மொழியை கற்றுவருகிறேன் என கூறியுள்ளார். கமல்ஹாசனின் சார் தயாரிப்பில், சிவகார்த்தியேனுடன் நடிக்கும் சேயோன் படம் பற்றி இப்போதைக்கு சொல்லமுடியாது. ஏனென்றால், அந்த படத்தோட கதை என்னோட கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப முக்கியமானது.
இதையும் படிங்க: 96 பட இயக்குநருடன் இணைந்த ஃபஹத் பாசில்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு – வைரலாக வீடியோ!
என்னை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களுக்கு காட்டும் மற்றும் அவர்களுடன் உண்மையான இணைப்பில் இருக்கவேண்டும் என்றால், நாம் நடிக்கும் மொழியை தெரிந்துகொள்ளவேண்டும். விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் நானே செய்தேன், தற்போது தமிழ் மொழியையும் தீவிரமாக கற்றுவருகிறேன்” என அதில் அவர் வெளிப்படையாக பேடியுள்ளார்.
சேயோன் திரைப்படத்தில் இணைந்தது குறித்து வெளியான பதிவு:
A birthday to remember and a journey to look forward to!
Wishing #BhagyashriBorse A very Happy Birthday as she joins the #Seyon Family #HappyBirthdayBhagyashri#சேயோன் #OneMoreTime#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM… pic.twitter.com/GvVIxmoZQv
— Raaj Kamal Films International (@RKFI) May 6, 2026
இந்த சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ், பாலா சரவணன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இதை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். அந்த வகையில் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மதுரையில் சிறப்பாக தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை விடுமுறையோடு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.