AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

96 பட இயக்குநருடன் இணைந்த ஃபஹத் பாசில்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு – வைரலாக வீடியோ!

Fahadh Faasil New Movie Pooja Video: தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் தற்போது, மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

96 பட இயக்குநருடன் இணைந்த ஃபஹத் பாசில்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு – வைரலாக வீடியோ!
ஃபஹத் பாசில் மற்றும் பிரேம் குமார் புதிய படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 May 2026 15:12 PM IST

இயக்குநர் பிரேம் குமாரின் (Prem Kumar) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தில் கார்த்தி (Karthi) மற்றும் அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. திரையரங்குகளில் இப்படம் போதுமான வரவேற்பை பெறாவிட்டாலும், ஓடிடியில் எமோஷனலாக ரசிகர்களை கவந்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக சியான் விக்ரமின் 64வது படத்தை (Chiyaan64) பிரேம் குமார் இயக்குவதாக கூறப்பட்டிருந்தது. அதற்கு முன் இவர், மலையாள நடிகர் ஃபஹத் பாசிலின் (Fahadh Faasil) நடிப்பில் புதிய படத்தை இயக்குவுள்ளார் என வட்டாரங்களில் கூறிவந்த நிலையில், சமீபத்தில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், கோவின் வசந்தா (Govind Vasantha) இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2026ம் ஆண்டு மே 16ம் தேதியில் நடந்த நிலையில், அது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மூணார் ட்ரிப் சென்ற சியான் விக்ரம்… சுற்றி குவிந்த பெண் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

ஃபஹத் பாசில் மற்றும் பிரேம் குமார் கூட்டணி படத்தின் பூஜை தொடர்பான வீடியோ பதிவு:

இந்த படமானது தற்போது ப்ரொடக்ஷன் 38 என அழைக்கப்பட்டுவரும் நிலையில், ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக கருப்பு, கருடன், ஸிரோ போன்ற படங்களில் நடித்திருந்த மலையாள நடிகை ஷிவதா நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியானது இப்படத்தின் மூலமாக முதல் முறை இணைந்துள்ளது. இந்த படமானது முற்றிலும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: தனது பெண் குழந்தைக்கு பெயரிட்ட அட்லீ – பிரியா தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?

இயக்குநர் பிரேம் குமாரின் இயக்கத்தில் காதல் மற்றும் எமோஷனல் போன்ற கதைகளத்தல் படங்கள் வெளியாகியிருந்த நிலையில், முதல் முத்தலாக் திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகிறதா? என எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கிய நிலையில், வரும் 2027ம் ஆண்டில் இப்படமானது வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை முடித்தவுடன் இயக்குநர் பிரேம் குமார் சியான் விக்ரமுடன் புதிய படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இப்படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us