AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் ஃபகத் பாசில் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

Director Prem Kumar will next direct a film starring actor Fahadh Faasil | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பிரேம் குமார் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஃபகத் பாசில் இருவரும் இணைந்து ஒரு படம் செய்ய உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் ஃபகத் பாசில் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!
பிரேம் குமார் மற்றும் ஃபகத் பாசில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 May 2026 17:15 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் பிரபல இயக்குநர் பாசிலின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படம் இவருக்கு தோல்வியை சந்தித்தது. மேலும் மலையாள சினிமாவில் பல ட்ரோல்களையும் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் வெளிநாட்டிற்கு சென்று நடிப்பு தொடர்பான படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 9 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஃபகத் பாசில் நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து அவரை கிண்டலடித்த வாய்கள் அனைத்தும் அடைத்து போகும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த ஃபகத் பாசில் தமிழ் சினிமாவில் வேலைக்காரன் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிகர் ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் ஃபகத் பாசில்:

இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக முன்பு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தில் 32-வது படமாக தயாராக உள்ளது நடிகர் ஃபகத் பாசில் மற்றும் இயக்குநர் பிரேம் குமார் படம். இந்த அறிவிப்பு தற்போது வெளியகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இது தேவதாசின் ரத்தம் தெறிக்கும் ஆட்டம்… வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் சினிமா ரசிகர்களே இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன பார்க்கலாமா?

Follow Us