AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: கருப்பு பட முதல் காட்சி.. ரசிகர்களுடன் திரையரங்கில் பார்வையிட்ட படக்குழு!

Karuppu FDFS Celebrations: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு. இந்த படமானது இன்று 2026 மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், முதல் காட்சியை ரசிகர்களுடன் திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சாய் அப்யங்கர் போன்ற பிரபலங்கள் பார்வையிட்டுள்ளனர்.

Karuppu: கருப்பு பட முதல் காட்சி.. ரசிகர்களுடன் திரையரங்கில் பார்வையிட்ட படக்குழு!
கருப்பு படத்தை திரையரங்கில் பார்வையிட்ட பிரபலங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 May 2026 13:13 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் பல பிரச்சனைகளை சந்தித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ள நிலையில், சூர்யா மற்றும் திரிஷா இணைந்தது நடித்துள்ளனர். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் சூர்யா, திரிஷா (Trisha), ஆர்.ஜே.பாலாஜி போன்ற பிரபலங்கள் வழக்கறிஞர்களாகவே நடித்துள்ளார். இன்று 2026 மே 15ம் தேதியில் காலை 9 மணி காட்சிகளுடன் இப்படமானது திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை ரோகிணி திரையரங்கில் இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா, சாய் அப்யங்கர் (Sai Abhyankkar) மற்றும் நடிகர் கார்த்தி என படக்குழு பிரபலங்கள் இணைந்து FDFS காட்சியை பார்த்துள்ளனர். இந்த காட்சிக்கு பிறகு ரசிகர்களிடம் ஆர்.ஜே.பாலாஜி சிரித்த முகத்துடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீதி காக்க கோர்ட் ஏறும் கருப்பசாமி.. சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

கருப்பு திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாடிய ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா தொடர்பான வீடியோ:

கருப்பு திரைப்படமானது நேற்று 2026 மே 14ம் தேதியில் வெளியிடப்படுவதாக இருந்தது. தயாரிப்பாளர் நிதி பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் 9 மணி ஷோ நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று மாலை வரை இந்த பிரச்னை முடியவில்லை என்ற நிலையில், நேற்று திரையிட தயாராகி இருந்த அனைத்து காட்சிகளும் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அழுதுகொண்டே கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று 2026 மே 15ம் தேதியில் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அமைந்த கருப்பு பட டைட்டில் கார்டு.. வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் இப்படத்தின் முதல் காட்சியை நடிகர் சூர்யா பார்வையிட்டவரவில்லை என்ற நிலையில், நடிகர் கார்த்தி, திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சாய் அபயங்கர் உட்பட கருப்பு படக்குழுவினர் அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்வையிட்டுள்ளனர். திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவரம் அதிகரித்துவரும் நிலையில், இப்படம் நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் தொடக்கத்திலே தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து வீடியோ இடம்பெற்றுள்ள நிலையில், அவரின் ரசிகர்களும் அதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us