ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு
Action King Arjuns Blast Movie Release Update: தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் பிளாஸ்ட் படத்தின் ரிலீஸ் எப்போது என்று படக்குழு அதிகராப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமா குடும்பத்தில் பிறந்தவர்தான் நடிகர் அர்ஜுன் சார்ஜா. இவர் கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கன்னட சினிமாவில் அர்ஜுன் சார்ஜா என்று அழைக்கப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் அவரை ஆக்ஷன் கிங் என்றே அழைப்பார்கள். தமிழ் சினிமாவில் அதிக அளவில் ஆக்ஷன் படங்களில் நடித்ததன் காரணாமக நடிகர் அர்ஜுனை ரசிகர்களும் பிரபலங்களும் ஆக்ஷன் கிங் என்றே அழைத்து வந்தனர். தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். அதனைத் தொடர்ந்து நாயகனாக இல்லாமல் வில்லன் மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகர் அர்ஜுன் சார்ஜா தீயவர் குலை நடுங்க என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து இருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் பிளாஸ். ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 28-வது படமாக இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிளாஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு:
இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் சார்ஜா உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா, ஜான் கோக்கன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுபாஸ் கே ராஜ் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அல்லு அர்ஜுனுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை பூஜா ஹெக்டே? எந்த படத்தில் தெரியுமா
பிளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
May 28th… the screens are set to #Blast 💥#BlastFromMay28#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@akarjunofficial @PreityMukundan @abhiramiact @highonkokken @arjunchdmbrm @subashraj1197 @RaviBasrur… pic.twitter.com/h6tuhfsX1m
— AGS Entertainment (@Ags_production) May 14, 2026
Also Read… அய்யனார் துணை சீரியல் ஷூட்டிங்கில் மதுமிதாவுக்கு ஏற்பட்ட சோகம்.. வைரலாகும் வீடியோ!