அல்லு அர்ஜுனுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை பூஜா ஹெக்டே? எந்த படத்தில் தெரியுமா
Actress Pooja Hegde pairs up with Allu Arjun once again: நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து இவர் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா 2 படம் உலக அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி உடன் கூட்டணி வைத்தார். அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தற்போது ராக்கா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




அல்லு அர்ஜுனுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை பூஜா ஹெக்டே?
தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் கூட்டணியில் முன்னதாக இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. அதிலும் குறிப்பாக அலா வைகுந்தபுரம்லோ படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த கூட்டணி மீண்டும் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 75 நாட்களில் உலக அளவில் தாய் கிழவி படம் வசூலித்தது இவ்வளவா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Iconic Pair Returning. #AlluArjun Fans Can’t Keep Calm Over This #AA23 Update!
👉#PoojaHegde is being considered as the female lead opposite #AlluArjun in director #LokeshKanagaraj’s upcoming big-budget film, tentatively titled #AA23.
👉Fans are excited about this reunion of… pic.twitter.com/igSOLD75wQ
— PaniPuri (@THEPANIPURI) May 13, 2026