AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

75 நாட்களில் உலக அளவில் தாய் கிழவி படம் வசூலித்தது இவ்வளவா?

Thaai Kizhavi Movie Box Office Collection For 75 Days Update: நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படம் 75 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்று அப்டேட் வைரலாகி வருகின்றது.

75 நாட்களில் உலக அளவில் தாய் கிழவி படம் வசூலித்தது இவ்வளவா?
தாய் கிழவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2026 19:11 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1978-ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து சுமார் 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா சரத்குமார். அதன்படி நடிகை ராதிகா சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்து வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஆரம்ப காலக்கட்டத்தில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணி வேடங்களிலும் நாயகன்களுக்கு அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் நடித்தப் படம் தாய் கிழவி.

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூழலமாக அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

75 நாட்களில் உலக அளவில் தாய் கிழவி படம் வசூலித்தது இவ்வளவா?

இந்த தாய் கிழவி படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படக்குழு ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தாய் கிழவி படம் திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து ஓடி வருவதாகவும் படம் இதுவரை உலக அளவில்  ரூபாய் 90 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… மீண்டும் ஜன நாயகன் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமேசான் நிறுவனம்? வைரலாகும் தகவல்

தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அடுத்த வாரம் தொடங்கும் சேயோன் படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

Follow Us