Trisha Krishnan: ‘அன்பு எப்போதும் உரக்க ஒலிக்கும்’.. திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட பதிவு!
Trisha Ageless Beauty: ரசிகர்களால் சவுத் குயின் என்று எப்போதும் அழைக்கப்பட்டுவருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவர் சமீபத்தில் முதல்வர் விஜய் பதிவியேற்ற விழாவில் கலந்துகொண்டிருந்தார். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஸ்டியூமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக படங்களில் நடித்து அசத்திவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக தயாராகியுள்ள படம் கருப்பு (Karuppu). இந்த திரைப்படத்தில் சூர்யா (Suriya) நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா, சமீபத்தில் தமிழக முதல் அமைச்சர் விஜய் (Tamil Nadu Chief Minister Vijay), முதலமைச்சராக பதிவியேற விழாவில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விழாவில் தனது தாயுடன் திரிஷா கலந்துகொண்டிருந்தார். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் நீல நிற சேலையில், கியூட் லுக்கில் வந்திருந்தார்.
42வது வயதாகியும் இன்னும் திரிஷா இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் இருந்தார். இந்நிலையில், நடிகை திரிஷா அந்த லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அதில், “அன்பு எப்போதும் உரக்க ஒலிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கருப்பு பட ட்ரெய்லரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?.. ட்ரெய்லர் கடைசியில் வரும் நபர் யார் தெரியுமா?
நடிகை திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட இன்ஸ்டாகிடம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை திரிஷா, “அன்பு எப்போதும் உரக்க ஒலிக்கும்” என எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவிற்கு, காதலர் தினம் படத்தில் இடம்பெற்றிருந்த, “காதலென்னும் தேர்வெழுதி” என்ற பாடலை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் திரிஷாவின் அழகை வர்ணித்து ரசிகர்கள் கமெண்டுகளைப் பதிவிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?
நடிகை திரிஷா நடிப்பில் 2026ம் ஆனதில் வெளியாகும் முதல் படம் கருப்பு. இப்படத்தில் திரிஷா ப்ரீத்தி என்ற வழக்கறிஞராக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். இது ஆக்ஷ்ன், நீதி மற்றும் கமர்ஷியல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படம் 2025 மே 14ம் தேதியில் வெளியாகும் நிலையில், ரசிகர்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக திரிஷா தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார்.