AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: கருப்பு பட ட்ரெய்லரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?.. ட்ரெய்லர் கடைசியில் வரும் நபர் யார் தெரியுமா?

Suriyas Karuppu Movie Trailer: சூர்யாவின் நடிப்பில் கருப்பு திரைப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவும் நிலையில், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த ட்ரெய்லரின் இறுதியில் நபர் ஒருவர் கருப்பசாமி வேடத்தில் இருப்பதாக காண்பிக்கப்பட்ட நிலையில், அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Karuppu: கருப்பு பட ட்ரெய்லரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?.. ட்ரெய்லர் கடைசியில் வரும் நபர் யார் தெரியுமா?
கருப்பு திரைப்பட டிரெய்லர் விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 May 2026 12:22 PM IST

கோலிவுட் சினிமாவில் பீக்கில் இருந்துவரும் நாயகனாக இருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் பிரம்மாண்ட படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் நடிகர் சூர்யா லீட் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, இதில் அவரே மெயின் வில்லனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் இப்படமானது ஒரு நீதிமன்றத்தில் நீதிக்காக வந்த மக்களை ஏமாற்றி பிழைக்கும் வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். அதை எதிர்க்கவரும் நீதிமானாக சூர்யா இருக்கிறார். இப்படமானது முழுக்க நீதி, தெய்வீகம் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், மொத்தம் 7 பாடல்கள் இப்படத்தில் உள்ளதாம். கருப்பு படமானது 2026 மே 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது.

அந்த வகையில் நேற்று 2026 மே 10ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ட்ரெய்லர் இறுதியில் யாரோ நபர் ஒருவர் கருப்பசாமி வேடத்தில் இருப்பதுபோல காட்டப்பட்டிருந்தது. அது யார் என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: நீதி காக்க வந்திறங்கிய கருப்பன்.. ஆக்ஷன் அதிரடியுடன் வெளியானது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!

கருப்பு பட ட்ரெய்லரின் இறுதியில் காட்டப்பட்ட நபர் யார்:

கருப்பு படத்தின் ட்ரெய்லரிலே தெரிகிறது. இந்த படத்தில் சூர்யா மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் என்று, இதில் திரிஷாவும் அருமையாக நடித்துள்ளார். இப்படமானது முழுக்க நீதிமன்றத்தில் வைத்து நடக்கும் கதைக்களமாக தயாராகியுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் இப்படத்தில் சூர்யா கருப்பசாமியாகவே நடித்திருக்கிறார். இதில் அவர் ஆர்.ஜே.பாலாஜிஜை அடித்து துவம்சம் செய்யும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ட்ரெய்லரின் இறுதியிலும், நடுவிலும் கருப்பசாமி இருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அந்த கருப்பசாமி வேடத்தில் இருக்கும் நபர் யார் என ரசிகர்கள் யோசிக்கும் நிலையில், அது சூர்யாவாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இப்படத்தின் கிளைமேக்ஸ், கிட்டத்தட்ட காந்தாரா 2 படத்தை போல பவர் ஃபுல்லாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கருப்பசாமியாக சூர்யா வேடமிட்டு நடித்திருப்பது உறுதியாக தெரிகிறது.

சூர்யா வெளியிட்ட கருப்பு பட ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:

இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த 2026ம் ஆண்டு ஜன நாயகன் படத்திற்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இது அமைந்த நிலையில், நிச்சயம் சூர்யாவிற்கு வெற்றி படமாக அமையும் என கூறப்படுகிறது. நிச்சயம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு சிறப்பான படமாக கருப்பு இருக்கும் என்பது உறுதி. ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us