IND U19 vs PAK U19: பாகிஸ்தானை வென்ற இந்தியா U19.. உணர்ச்சி பொங்க பாராட்டிய காம்பீர்!
Gautam Gambhir praise: பாகிஸ்தானுக்கு எதிரான U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் திரில் வெற்றி. கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து மோஹித் உல்வா சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். இந்த வரலாற்று வெற்றியை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மனதாரப் பாராட்டினார். அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையையும், அச்சமற்ற ஆட்டத்தையும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை (U19 Asia Cup) வென்றதற்காக இந்திய இளம் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மனதார பாராட்டினார். விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தியபோது, மற்ற பல இந்திய ரசிகர்கள் மற்றும் வீரர்களை போலவே கௌதம் காம்பீர் (Gautam Gambhir) பேரானந்தம் அடைந்தார். பதற்றம் நிறைந்த அந்தப் போட்டியில், கடைசிப் பந்து வரை என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இந்தியா வெற்றிபெற ஒரு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, மோஹித் உல்வா ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவை சாம்பியனாக்கினார்.
ALSO READ: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!




இதுகுறித்து பதிவிட்ட தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர், “உணர்ச்சிக்கு பேட்டிங் வரிசை கிடையாது” என்று எழுதி, தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். அதில், ”அச்சமற்ற கிரிக்கெட். அசைக்க முடியாத நம்பிக்கை. நாட்டின் கொண்டு அளவு கடந்த நேசத்திற்கு பேட்டிங் வரிசை கிடையாது. ஆசியாவின் சாம்பியன். வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
போட்டியில் நடந்தது என்ன..?
Fearless cricket. Unshakable belief. Grit has no batting order !!
Champions of Asia!
Well done, boys! 🇮🇳🏆 https://t.co/n2mTAsZPHz
— Gautam Gambhir (@GautamGambhir) November 14, 2026
338 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்தியா, 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. அந்த நேரத்தில், இந்தியா போட்டியில் தோற்றுவிடும் என்று தோன்றியது. ஆனால் பின்னர், வேகப்பந்து வீச்சாளர்களான மோஹித் உலாவா மற்றும் மனால் சௌஹான் இடையேயான 57 ரன் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தது. இருப்பினும், அந்த பார்ட்னர்ஷிப் பிரிந்த பிறகு, ஆட்டத்தின் போக்கு மீண்டும் பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியது. இருப்பினும், கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவிற்கு பட்டத்தை வென்று கொடுத்தார்.
மோஹித் உல்வா 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உதவியுடன் 49 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சாதனை, மோஹித் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதையும், அதே சமயம் அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளரும் கூட என்பதையும் காட்டுகிறது.
ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிராக சம்பவம்.. யார் இந்த மொஹித் உல்வா..?
கடைசி ஓவர் குறித்து மோஹித் உல்வா கூறியது என்ன..?
கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. நிலைமை, கடைசிப் பந்தில் 3 ரன்கள் என்ற நிலைக்கு மாறியிருந்தது. இது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு பதட்டமான சூழ்நிலையாக இருந்திருக்கும். கடைசி ஓவர் குறித்து மோஹித் உல்வா கூறுகையில், “என் மீதும் கடவுள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதற்கு முன்பு ஆசியக் கோப்பை எனக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. நான் ஒரு பந்துவீச்சாளர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் ஒரு ஆல்-ரவுண்டர் என்றும் நம்ப வேண்டியிருந்தது. மறுமுனையில் எனக்கு மனலின் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது” என்றார்.