Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆசியக் கோப்பை - Asia Cup

ஆசியக் கோப்பை - Asia Cup

ஆசியக் கோப்பை என்பது ஆசியாவின் முதன்மையான கிரிக்கெட் போட்டியாகும். இதில் ஆசியாவை சேர்ந்த முக்கியமான அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். ஆசியக் கோப்பையானது கடந்த 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய அணியே அதிக முறை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதாவது, ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற நாடுகள் இன்னும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கோப்பையானது ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

Read More

Asia Cup 2025: என் அனுமதி இல்லாமல்.. நக்வி பிடிவாதம்! இந்திய அணிக்கு கோப்பை தர மறுப்பு!

Asian Cricket Council: இந்திய அணி கோப்பையை வென்றபோதும் கோப்பையை வெல்லாததால் ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வி அதை தன்னுடன் எடுத்துச் சென்றார். அன்றிலிருந்து அந்தக் கோப்பை ஏசிசி அலுவலகத்தில் உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் காரணமாக பதட்டங்கள் அதிகரித்தது.

Asia Cup Trophy Controversy: ஆசியக் கோப்பை விவகாரம்! பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டாரா நக்வி? வெளியான தகவல்!

Asia Cup Trophy Mohsin Naqvi: சமீபத்திய கூட்டத்தில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதைத் தொடர்ந்து, கூட்டத்தின் போது நக்வி மன்னிப்பு கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Asia Cup Trophy Controversy: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!

Asian Cricket Council: துபாயில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொதுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகளாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் இருந்தனர்.

முட்டாள்தனம்.. பாகிஸ்தான் பயிற்சியாளரை சாடிய அக்தர்!

Asia Cup 2025: ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, முன்னாள் வீரர் சோயப் அக்தர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் பேட்டிங் சரிவு, தவறான அணித் தேர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி – ஆம் ஆத்மியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சூர்ய குமார் யாதவ் – நடந்தது என்ன?

Suryakumar Yadav : ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பை போட்டிகளில் தான் பெற்ற வருமானத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Asia Cup Trophy Controversy: இந்திய அணி எப்போது ஆசிய கோப்பையை கிடைக்கும்? நக்விக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை!

India didn't collect Asia Cup trophy: ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்துவிட்டது. அப்போது, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரால் இந்திய அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

ஜெயிச்சாலும் கோப்பை வேண்டாம்.. இந்திய அணியை கோபமூட்டிய பாகிஸ்தான் அமைச்சர்.. யார் இவர்?

Who is Mohsin Naqvi : இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றாலும், பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க மறுத்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் யார் இந்த அமைச்சர், இந்தியாவுக்கு எதிரான இவரின் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம்

ஆசியக் கோப்பை இந்தியா வெற்றி.. ஹைதராபாத் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு எதிரானது என்பதால் இந்தியா முழுவதும் வெற்றிக்கொண்டாட்டங்கள் களைகட்டின. ஹைதராபாத்தில் கூடிய ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி வெற்றியை கொண்டாடினர். இந்திய கொடிகளை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

IND vs PAK: பும்ரா தரமான செய்கை.. நொந்துபோன பாகிஸ்தான் வீரர்!

Jasprit Bumrah vs Haris Rauf: ஆசியக் கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா செய்த செயல் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Ind vs Pak: அபிஷேக் சர்மாவிற்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கும் சஞ்சு சாம்சன்? என்ன காரணம்?

Asia Cup 2025 : ஆசியக் கோப்பை 2025 போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதன் காரணமாக, இந்தப் போட்டியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியில்  எந்த அணி தோற்றாலும் நீண்ட நாட்கள் பேசப்படும்.இதனால் இரு அணிகளும் கடுமையாக தயாராகி வருகின்றன.

IND vs PAK : சிவம் துபேவுக்கு மிகப்பெரிய பொறுப்பு.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இதை கவனிச்சீங்களா?

Shivam Dube : பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சிவம் துபே தனது சர்வதேச வாழ்க்கையில் முதல் முறையாக இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இது சாத்தியமானது

Asia Cup 2025 Prize Money: 2025 ஆசியக் கோப்பையில் கோடியை அள்ளப்போவது யார்..? பரிசுத்தொகையை எவ்வளவு தெரியுமா?

Asia Cup 2025 Final: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுத் தொகையை அதிகரித்து வருகிறது. இந்த முறையும், வெற்றி பெறும் அணிக்கு முன்பை விட அதிக பரிசுத் தொகை கிடைக்கும். 2025 ஆசிய கோப்பைக்கான பரிசுத் தொகை 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

India – Pakistan: 28ம் தேதியில் இந்திய அணிக்கு எவ்வளவு ராசியா..? தொட்டதெல்லாம் வெற்றி..!

2025 Asia Cup Final: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, உணர்ச்சிகளின் சூறாவளி. இரு நாட்டு ரசிகர்களும் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த 2025 ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இதுவாகும்.

IND vs PAK Final: இந்தியா – பாகிஸ்தான் பைனலில் மழைக்கு வாய்ப்பு..? யாருக்கு சாம்பியன் பட்டம்?

IND vs PAK Rain Chances: இந்தியா vs பாகிஸ்தான் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் மழைக்கு வாய்ப்பு இருக்கா..? மழை பெய்தால் எந்த அணிக்கு கோப்பை வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம். 

IND vs PAK T20 Record: முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை எப்படி?

IND vs PAK Asia Cup Final: ஆசிய கோப்பை மட்டுமின்றி, உலக கோப்பை உள்ளிட்ட மற்ற சர்வதேச போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இதுவரை டி20 சர்வதேச போட்டிகள் பெரும்பாலும் மிகக் குறைந்த ஸ்கோர்களே பதிவாகியுள்ளன.