IPL 2026 Start Date: ஐபிஎல் 2026ல் அட்டவணை எப்போது வெளியீடு? அப்டேட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்!
IPL 2026 Schedule: ஐபிஎல் போட்டியின் முதல் போட்டி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சொந்த மைதானமான எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 2025 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் கடந்த 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற நிறைவு விழாவின்போது, ஐபிஎல் ஒளிபரப்பை ஒப்பந்தம் செய்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஐபிஎல் 2026 சீசன் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் என்று அறிவித்தது. இருப்பினும், இதுதொடர்பாக ஐபிஎல் அல்லது பிசிசிஐ (BCCI) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதன்படி, போட்டி தொடங்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படாதது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!




2 கட்டங்களாக வெளியாகும் ஐபிஎல் 2026 அட்டவணை:
“We plan to announce IPL 2026 schedule by March 12. For now, we are going to announce the IPL 2026 schedule for first 20 days,” BCCI Secretary Devajit Saikia told IANS. pic.twitter.com/91eaQHAQP1
— IANS (@ians_india) March 10, 2026
அட்டவணை வெளியிடப்பட்டதும், தொடக்கப் போட்டிகளில் எந்த அணிகள் விளையாடும் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். முந்தைய தேர்தல் ஆண்டுகளை போலவே, இந்த 2026ம் ஆண்டிலும் பிசிசிஐ 2 கட்டங்களுக்கான அட்டவணையை வெளியிடலாம். இதன் பொருள் முதல் 15 முதல் 20 நாட்கள் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே முதலில் அறிவிக்கப்படும். மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகள் பின்னர் வெளியிடப்படலாம். ஐபிஎல் போட்டியின் முதல் போட்டி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சொந்த மைதானமான எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 2025 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அட்டவணை வெளியிடப்பட்ட பின்னரே இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.
ஏன் 2 வகையாக அட்டவணை..?
ஐபிஎல் 2026 அட்டவணையை 2 கட்டங்களாக வெளியிடுவதற்கு வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல்கள் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வருகின்ற 2026 ஏப்ரல் – மே மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு ஐபிஎல் ஏற்பாட்டாளர்கள் இத்தகைய அட்டவணையை கையில் எடுக்கின்றனர்.
ALSO READ: தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. சிஎஸ்கேவுக்கு புதிய பீல்டிங் கோச்!
பிசிசிஐ செயலாளர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி:
செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம் பேசிய பிசிசிஐ செயலாளர், “மார்ச் 12 ஆம் தேதிக்குள் ஐபிஎல் 2026 அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்போதைக்கு, முதல் 20 நாட்களுக்கான அட்டவணையை வெளியிடுவோம்” என்றார்.