AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!

IPL 2026 Schedule: ஐபிஎல் 2026 சீசனின் அட்டவணை 2 கட்டங்களாக வெளியிடப்படலாம். ​​கிரிக்பஸின் கூற்றுப்படி, இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகக் குழு ஐபிஎல் 2026 இன் முதல் கட்டத்திற்கான அட்டவணையை அங்கீகரித்துள்ளது. முதல் கட்டத்திற்கான அட்டவணை 2026 மார்ச் 6 அல்லது 7 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!
ஐபிஎல் 2026 அட்டவணைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Mar 2026 18:14 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடங்க இருக்கிறது. இருப்பினும், 2026 ஐபிஎல் சீசன் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. கிடைத்த ஊடக அறிக்கைகளின்படி, ஐபிஎல் 2026 (IPL 2026) அட்டவணை வருகின்ற 2026 மார்ச் 6 அல்லது 7 ம் தேதி அறிவிக்கப்படலாம். முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் 2026 அட்டவணை வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, ஐபிஎல் 2026 அட்டவணையை ஏற்கனவே பிசிசிஐ உறுதிப்படுத்தி விட்டதாகவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ALSO READ: சிஎஸ்கே பயிற்சி முகாமில் தோனி.. க்யூட்டாக இளம் வீரர்கள் முன் நடனம்..!

2 கட்டங்களாக அட்டவணை:

ஐபிஎல் 2026 சீசனின் அட்டவணை 2 கட்டங்களாக வெளியிடப்படலாம். ​​கிரிக்பஸின் கூற்றுப்படி, இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகக் குழு ஐபிஎல் 2026 இன் முதல் கட்டத்திற்கான அட்டவணையை அங்கீகரித்துள்ளது. முதல் கட்டத்திற்கான அட்டவணை 2026 மார்ச் 6 அல்லது 7 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி நடப்பு சாம்பியன் ஆர்சிபியின் சொந்த மைதானத்தில் நடைபெற வேண்டும் என்பதால், 2026 ஐபிஎல் சீசனின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

2026 ஐபிஎல் எப்போது தொடங்கும், இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 5 போட்டிகளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடும் என்று ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு பிளேஆஃப் போட்டி மற்றும் ஐபிஎல் 2026ன் இறுதிப் போட்டி கூட சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2026 மார்ச் 28 அல்லது 29 அன்று தொடங்கலாம், இதன் இறுதிப் போட்டி மே 31ம் தேதி நடைபெறலாம்.

அட்டவணை வெளியிட தாமதம் ஆனது ஏன்..?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியை தற்போது இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு, வெளிநாட்டு வீரர்களுக்கான NOC சான்றிதழ்களை அணிகள் பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். இதன்பிறகு, பயிற்சி அமர்வுகள் பற்றிய தகவல்கள் அடுத்த வாரம் அனைத்து உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும்.

ALSO READ: சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள்.. மார்ச் 15 முதல் பயிற்சி.. ஆர்சிபி அணிக்கு 6 நிபந்தனைகள்!

இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. எனவே, ஐபிஎல் 2026 அட்டவணை இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்படும். தேர்தல் நாட்களில் இந்த மூன்று மாநிலங்களிலும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பாதுகாப்பற்றதாக இருக்கும். எனவே, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பிசிசிஐ இரண்டாம் கட்டத்திற்கான அட்டவணையை அறிவிக்கும்.

Follow Us