AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம்! இந்தியா வர தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. பிசிசிஐ முடிவு என்ன?

IPL 2026 Travel Crisis: மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் காரணமாக ஐபிஎல் 2026 சீசனில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் பதட்டங்கள் நிலவுகிறது.

IPL 2026: மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம்! இந்தியா வர தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. பிசிசிஐ முடிவு என்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Mar 2026 15:45 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) முடிந்த கையோடு இந்தியாவில் ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. முன்னதாக, தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் பிஎல் 2026 தொடக்க தேதியை மார்ச் 28, 2026 என பிசிசிஐ திருத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் காரணமாக ஐபிஎல் 2026 சீசனில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் பதட்டங்கள் நிலவுகிறது. இதனால், முக்கியமான விமான போக்குவரத்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் உரிமையாளர்களும் பிசிசிஐயும் அவசர திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றன.

ALSO READ: ஐபிஎல் 2026 தொடக்க தேதி மாற்றம்..? தமிழ்நாடு காரணமா? பிசிசிஐ முக்கிய முடிவு!

வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா..?

பெரும்பாலான சர்வதேச வீரர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் போக்குவரத்துக்காக துபாய் மற்றும் அபுதாபி போன்ற வளைகுடா மையங்களை நம்பி இருக்கின்றனர். இந்த போர் பட்டங்கள் காரணமாக, துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட அரபு நாடுகளில் பல விமான நிறுவனங்கள் இந்தப் பகுதிகளுக்கான விமானங்களை நிறுத்திவிட்டதால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்களுக்கு பாதுகாப்பான பாதையை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.

வீரர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை:

ஐபிஎல் 2026 சீசனில் பங்கேற்பதற்காக சில வெளிநாட்டு வீரர்கள் வான்வெளியில் பயணிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, ஐசிசி வளைகுடாப் பகுதியைத் தவிர்ப்பதற்காக ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மையங்கள் வழியாக வீரர்களை திருப்பி அனுப்ப, திட்டங்களை வகுத்து வருகிறது.

இருப்பினும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக ஐபிஎல் 2026க்கான பல வெளிநாட்டு வீரர்கள், அணி நிர்வாகம், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பு அணிகள் மற்றும் நிகழ்வு ஊழியர்கள் வருகை நிச்சயமற்றதாக உள்ளது.

பிசிசிஐயின் திட்டம் என்ன?

ஐபிஎல் 2026 அட்டவணை சவால்களை கையாள, பிசிசிஐ நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஐபிஎல் தற்போது 2026 மார்ச் 28 முதல் 2026 மே 31 2026 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ: துபாயில் சிக்கித் தவித்த பி.வி. சிந்து.. அவர் சொன்ன ஷாக் தகவல்கள்!

மத்திய கிழக்கு பதட்டங்களுடன், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றினாலும், பிசிசிஐ ஐபிஎல் 2024 சீசனை போலவே 2 பகுதிகளாக அட்டவணையை வெளியிட வாய்ப்புள்ளது. போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு முற்றிலும் தவிர்த்து, சர்வதேச இணைப்பு உள்ள மற்ற இடங்களை பிசிசிஐ தேர்வு செய்யலாம்.

Follow Us