AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BBL: சென்னையில் பிபிஎல்.. புது திட்டம் போடும் ஆஸ்திரேலியா.. காரணம் என்ன?

Big Bash League In India: இந்தியாவில் பிபிஎல் நடத்தப்பட வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது முக்கியம். இந்திய மற்றும் தெற்காசிய ரசிகர்களை இணைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளானாக இது அமையும்.

BBL: சென்னையில் பிபிஎல்.. புது திட்டம் போடும் ஆஸ்திரேலியா.. காரணம் என்ன?
பிபிஎல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 17 Feb 2026 19:38 PM IST

2026- 27 பிக் பாஷ் லீக்கின் (BBL 2026-27) முதல் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. பிக் பாஷ் லீக்கின் வணிக நடவடிக்கைகளின் தலைவர் பில் ரிக்பி மற்றும் போட்டி மேம்பாடு மற்றும் உத்தித் தலைவர் மார்கோட் ஹார்லி சமீபத்தில் சென்னையில் (Chennai) போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளனர். கிரிக்கெட்டை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவில் ஆதரவு கொடுக்கின்றனர் என்ற அடிப்படையில் இத்தகைய முடிவு எடுத்ததாக தெரிகிறது.

ALSO READ: பிரமாண்டமாக தொடங்கும் 2026 குளிர்கால ஒலிம்பிக்.. இந்தியாவில் எங்கே, எப்படி காணலாம்? A-Z விவரங்கள் இதோ!

ஏன் இந்த முடிவு..?


2025 – 26 பிபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சிட்னி சிக்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்குகளில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான அணியாகும். இந்தநிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய மார்க்கெட்டிங்கை ஈர்ப்பதற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிக் பாஷ் லீக்கின் அடுத்த சீசனை சென்னையில் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா பல நிலைகளில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் பிபிஎல் நடத்தப்பட வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது முக்கியம். இந்திய மற்றும் தெற்காசிய ரசிகர்களை இணைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளானாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. அதன்படி, சென்னையில் பிபிஎல் நடத்தப்பட்டால் நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நினைக்கிறது.

ALSO READ: மகளிர் பிரீமியர் லீக்கில் நுழையும் சிஎஸ்கே.. குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

பிக் பாஷ் லீக்:

பிக் பாஷ் லீக் உலகளவில் மிகவும் பிரபலமான லீக்குகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2025-26 பிக் பாஷ் லீக்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்க முடிவு எடுத்தார். ஆனால் காயம் காரணமாக விலகினார். அஸ்வின் சிட்னி சிக்சர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.