Chennai Super Kings: மகளிர் பிரீமியர் லீக்கில் நுழையும் சிஎஸ்கே.. குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!
Women's Premier League: மகளிர் பிரீமியர் லீக்கின் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு அணி கூட இல்லாத IPL உரிமையாளர்களில் CSK அணியும் ஒன்றாகும். தற்போது, மும்பை, பெங்களூரு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தை தளமாகக் கொண்ட ஐந்து அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்றன.
டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), விரைவில் மகளிர் கிரிக்கெட்டில் நுழைய உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத், வரும் ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து, தங்கள் அணி விரிவடையும் என்று தெரிவித்துள்ளார். இதன் பொருள் சிஎஸ்கே அணி மகளிர் பிரீமியர் லீக்கிலும் இனி வரும் காலங்களில் விளையாடுவதைக் காணலாம்.
ALSO READ: பைனலில் ஆர்சிபி! வேறு எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்?




சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியது என்ன..?
🚨 CSK TO INVEST IN WOMEN’S CRICKET. 🚨
– CSK CEO confirms the next step of CSK would be to invest in women’s cricket. (Revsportz). pic.twitter.com/zWjBP61rxl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 3, 2026
2026 பிப்ரவரி 3 ஆம் தேதியான இன்று நடைபெற்ற இன்வெஸ்ட் இன் தமிழ்நாடு மாநாட்டில் ரெவ்ஸ்போர்ட்ஸிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், எதிர்காலத்தில் மகளிர் கிரிக்கெட்டில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் இந்த முடிவு உடனடியாக செயல்படுத்தப்படாது என்றார். இதன்மூலம், சிஎஸ்கே பெண்கள் கிரிக்கெட்டில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “ மகளிர் கிரிக்கெட்டில் சிஎஸ்கே நுழைவது உடனடியாக இல்லை. ஆனால், வரும் ஆண்டுகளில் சிஎஸ்கே நிச்சயமாக விரிவடையும். எங்கள் முதல் முன்னுரிமை மகளிர் கிரிக்கெட்டாக இருக்கும். மேலும், பிற விளையாட்டுகளிலும் வாய்ப்புகளை ஆராயலாம்” என்று தெரிவித்தார்.
மகளிர் பிரீமியர் லீக்கில் களமிறங்குகிறதா சிஎஸ்கே..?
மகளிர் பிரீமியர் லீக்கின் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு அணி கூட இல்லாத IPL உரிமையாளர்களில் CSK அணியும் ஒன்றாகும். தற்போது, மும்பை, பெங்களூரு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தை தளமாகக் கொண்ட ஐந்து அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸைத் தவிர, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற முக்கிய உரிமையாளர்களும் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்னும் பங்கேற்கவில்லை.
ALSO READ: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு புதிய கேப்டன்.. ஆல்ரவுண்டரை களமிறக்கும் நிர்வாகம்..!
இருப்பினும், கடந்த சில மாதங்களாக, பல உரிமையாளர் உரிமையாளர்கள் மகளிர் பிரீமியர் லீக்கில் புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தின் போது, டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஐபிஎல் சீசனில் தற்போது 10 அணிகள் விளையாடுவது போன்று, மகளிர் பிரீமியர் லீக்கை விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தார்.