WPL 2026: தேர்தல் காரணமாக சிக்கலில் மகளிர் பிரீமியர் லீக்.. குழப்பத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா!
Women's Premier League: மும்பை இந்தியன்ஸ் மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் 2026 போட்டி அன்றைய தினம் நடைபெறும். தேர்தல்கள் காரணமாக, 2026 ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட WPL போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பி.எம்.சி தேர்தல்கள் 2026 ஜனவரி 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் 2026 போட்டி அன்றைய தினம் நடைபெறும். தேர்தல்கள் காரணமாக, 2026 ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட WPL போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.என்.எஸ்ஸின் கூற்றுப்படி, பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா, பார்வையாளர்கள் இன்றி மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
ALSO READ: டெஸ்ட் பயிற்சியாளர் மாற்றமா? VVS லட்சுமணுடன் பிசிசிஐ அதிகாரிகள் ரகசியம் கூட்டம்! என்ன நடந்தது?




இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தேவ்ஜித் சைகியா அளித்த பேட்டியில், “ வருகின்ற 2026 ஜனவரி 15ம் தேதி மும்பையில் பிஎம்சி மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. எனவே, போட்டிகளை நடத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வந்தாலும், கிரிக்கெட் பார்வையாளர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. போட்டிகள் நடைபெற்றாலும், வருகின்ற 2026 ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பாதுகாப்பு வழங்க முடியாது என்று மும்பை காவல்துறை கூறுவதால், பார்வையாளர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி தேர்தல் எப்போது..?
#BREAKING BCCI Secretary Devajit Saikia to IANS on likelihood of WPL 2026 on January 14 & 15 to be held behind closed doors due to Brihanmumbai Municipal Corporation (BMC) elections
“The thing is that there is a local (municipal) election in Mumbai on 15th. So we are… pic.twitter.com/4NN4DUrTMl
— IANS (@ians_india) January 12, 2026
மும்பை பி.எம்.சி என்று அழைக்கப்படும் மாநகராட்சி தேர்தல்கள் வருகின்ற 2026 ஜனவரி 15ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கு பிறகு, வாக்குகள் வருகின்ற 2026 ஜனவரி 16ம் தேதி எண்ணப்படும். இருப்பினும், 16ம் தேதி குறித்து பிசிசிஐ கவலை கொள்ளவில்லை என்றாலும், 2026 ஜனவரி 14 மற்றும் 2026 ஜனவரி 15ம் தேதிகளில் பார்வையாளர்கள் இன்றி, கொரோனா காலங்களில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை போன்ற, மகளிர் பிரீமியர் லீக் 2026ல் சில போட்டிகள் தேர்தல் அன்று நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
WPL 2026 அட்டவணை:
மகளிர் பிரீமியர் லீக் 2026ன் அனைத்து போட்டிகளும் வருகின்ற 2026 ஜனவரி 17ம் தேதி வரை நவி மும்பையில் நடைபெறும். பிஎம்சி தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 2026 ஜனவரி 14ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணி UP வாரியர்ஸை எதிர்கொள்ளும். 2026 ஜனவரி 16ம் தேதி UP வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.