AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் இயங்காது.. இன்று முதல் அதிரடி நடவடிக்கை!

Active Sim Card For Your WhatsApp Number Is Mandatory | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் செயல்படாது என்று மெட்டா அறிவித்துள்ளது.

ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் இயங்காது.. இன்று முதல் அதிரடி நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Mar 2026 15:28 PM IST

தற்போது ஒட்டுமொத்த உலகமுமே தொழில்நுட்பத்தின் (Technology) அடிப்படையில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தான் மொபைல் செயலிகள். முன்பெல்லாம் மின்சார கட்டணம் செலுத்துவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் உரையாடுவது என ஒவ்வொரு தேவைக்கும் ஒரு இடத்திற்கு சென்று காத்திருந்து செய்து முடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் மொபைல் செயலி வந்துவிட்டது. இருக்கும் இடத்தில் இருந்து நொடி பொழுதில் இந்த சேவைகளை செய்து முடிவித்துவிட முடியும்.

தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக உள்ள வாட்ஸ்அப்

அந்த வகையில் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. விரைவாகவும், சுலபமாகவும் ஒருவர் மற்றவரை தொடர்புக்கொள்ள முடியும் என்பதால் பலரும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக இருந்தாலும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைப்பாடுகள் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதனை சரிசெய்ய மெட்டா (Meta) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி!

வாட்ஸ்அப் செயலியை பொருத்தவரை ஒருமுறை சிம் கார்டு வைத்து கணக்கை திறந்துவிட்டால் அடுத்து அந்த சிம் கார்டு கானாமல் போனாலோ அல்லது செயலிழந்து போனாலோ தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் பல்வேறு மோசடிகள் மற்றும் குற்ற சம்பங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தான், மத்திய அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, ஆக்டிவ் சிம் இருந்தால் மட்டுமே வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும் என்ற உத்தரவை பிறப்பித்தது.

ஆக்டிவ் சிம் இல்லை என்றால் இன்று முதல் வாட்ஸ்அப் செயல்படாது

மத்திய அரசு தனது கொள்கையில் தீவிரமாக இருந்த நிலையில், வேறு வழியின்றி மெட்டா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் செயலி இன்று (மார்ச் 01, 2026) முதல் செயல்படாது என்று மெட்டா அறிவித்துள்ளது. எனவே வாட்ஸ்அப் பயனர்கள் ஆக்டிவ் சிம் வைத்தில்லை என்றால் அவர்களது வாட்ஸ்அப் இயங்காமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us