AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

iQOO 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்?.. முழு விவரம் இதோ!

iQOO 16 Smartphone Launched In China | iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சீனாவில் தற்போது தனது iQOO 16 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

iQOO 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள்?.. முழு விவரம் இதோ!
iQOO 16 ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Sep 2026 18:29 PM IST

iQOO நிறுவனம் தொடர்ந்து தனது  புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், iQOO 16 ஸ்மார்ட்போனை (iQOO 16 Smartphone) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் எம்16 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ள நிலையில், குவால்கமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன்  8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில், iQOO 16 ஸ்மார்ட்போன் கொண்டுள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் அதன் விலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

iQOO 16 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் சீனாவில் தனது iQOO 16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் 2கே சாம்சங் எம்16 LTPO AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்டிரீம் ஜென் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் LPDDR5X Ultra அல்லது LPDDR5X Ultra Pro RAM கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வரை சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : தள்ளுபடி காலத்தில் புத்திசாலித்தனமாக ஷாப்பிங்.. ₹2,000-க்கும் குறைவான விலையில் TWS இயர்பட்ஸை வாங்குவது எப்படி?

iQOO 16 ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.5,999 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.85,815 ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 6,799 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.97,260 ஆகும். 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 7,499யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.07 லட்சம் ஆகும். மேலும், 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 8,499 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் இந்திய மதிப்பு ரூ.1.22 லட்சம் ஆகும்.

Follow Us