AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பட்டன் போன் பயனர்களுக்கு பெரிய Relief.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு Strict Rules போட்ட TRAI!

Recharge Plans Without Data | இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா இல்லாத திட்டங்களை பெருமபளவு குறைந்துவிட்டன. இதன் காரணமாக பட்டன் போன் பயன்படுத்தும் நபர்கள் சிக்கலை எதிர்க்கொண்டு வந்த நிலையில், பட்டன் போன் பயனர்களுக்கு ஆதரவு அளிக்கும் அறிவிப்பை TRAI வெளியிட்டுள்ளது.

பட்டன் போன் பயனர்களுக்கு பெரிய Relief.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு Strict Rules போட்ட TRAI!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Sep 2026 16:58 PM IST

தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் தங்களது தகவல் பரிமாற்ற தேவைகள் உள்ளிட்டவற்றுக்காக மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். என்னதான் வகை வகையான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமானாலும் சிலர் நெட்வொர்க் வசதி இல்லாத பட்டன் போனை தான் பயன்படுத்த விரும்புகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இந்த பட்டன் போன்கள் உள்ள நிலையில், அதற்கான ரீச்சார்ஜ் திட்டங்கள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்ததனர்.

இந்த நிலையில் தான், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – Telecom Regulatory Authority Of India) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன, அதன் மூலம் பொதுமக்களுக்கு என்ன என்ன சிறப்பு பலன்கள் கிடைக்க உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : மனைவிக்கு ஐபோன் 18 ப்ரோ வாங்க தங்க நகையை விற்பனை செய்த கணவன்!

ரீச்சார்ஜ் பிளான்களை நிறுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

என்னதான் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டாலும், சிலர் இன்றும் கூட பட்டன் போன்களை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களை கணக்கில் கொள்ளாத தொலைத்தொடர்பு நிறுவணங்கள் வெறும் குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் கால்கள் அடங்கிய பட்டன் போன்களுக்கான ரீச்சார்ஜ் திட்டங்களை நீக்கிவிட்டன. இதன் காரணமாக பட்டன் போன் பயனர்கள் தங்களுக்கான சரியான ரீச்சார்ஜ் திட்டம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், தேவையே இல்லை என்றாலும் டேட்டா உடன் கூடிய ரீச்சார்ஜ் திட்டங்களை ரீச்சார்ஜ் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஷாக் கொடுத்த சாம்சங்.. எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி

இந்த நிலையில் தான், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட்வொர்க் வசதி இல்லாத வெறும் வாய்ஸ் கால் மற்றும் குறுஞ்செய்தி வசதிகள் மட்டுமே உள்ள வகையில், குறைந்த விலையில் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் மிக குறைந்த விலையிலான பட்டன் போன்களுக்கு ஏற்ற ரீச்சார்ஜ் திட்டங்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us