AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை விற்பனைக்கு வரும் ஐபோன் 18 சீரீஸ்.. அதுவும் அட்டகாசமான சலுகைகள் உடன்!

iPhone 18 Series Smartphones Launching Tomorrow | ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிளின் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் நாளை முதல் விற்பனைக்கு வர உள்ளன.

நாளை விற்பனைக்கு வரும் ஐபோன் 18 சீரீஸ்.. அதுவும் அட்டகாசமான சலுகைகள் உடன்!
ஐபோன் 18
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Sep 2026 23:50 PM IST

உலக அளவில் எராளமான நபர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருந்த ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (iPhone 18 Series Smartphones) அறிமுகமாகியுள்ள நிலையில், எப்போது விற்பனைக்கு வரும் என காத்திருந்த இந்தியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. காரணம், ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நாளை (செப்டம்பர் 18, 2026) விற்பனைக்கு வர உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த அளவே விற்பனைக்கு வந்தாலும், பல அட்டகாசமான அம்சங்களுடன் வருகின்றன. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

“Surprise and Shine” நிகழ்ச்சியில் “Surprise” கொடுத்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 09, 2026 அன்று தனது “Surprise and Shine” நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் தனது ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro) மற்றும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) ஆகியவற்றை அறிமுகம் செய்தது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஆப்பிள் ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 23, 2026 அன்று முதல் விற்பனைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!

முன்பதிவு செய்தவர்களுக்கு ஐபோன் வழங்குவதில் முன்னுரிமை

மிக குறைந்த அளவிலான ஸ்மார்ட்போன்களே விற்பனைக்கு வர உள்ளன. இதன் காரணமாக தான், இந்தியா முழுவதும் உள்ள ஆப்பிள் ஷோ ரூம்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஐபோனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஐபோனை வழங்கிய பிறகு, மீதமுள்ள ஐபோன்களை கடைக்கு நேரடியாக சென்று வாங்க நினைக்கும் பயனர்களுக்கு வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : பண்டிகை காலத்தில் பரிசாக வழங்க சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ்.. boAt தரும் மாடல்கள்!

ஆப்பிள் 17 சீரீஸை விடவும் இந்த ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சலுகைகள் மற்றும் பழைய ஐபோன் எக்ஸ்சேஞ் ஆகியவற்றை பயன்படுத்தி சற்று குறைந்த விலைக்கே ஐபோன்களை வாங்கிக்கொள்ளலாம்.

Follow Us