கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே.. கண்டித்த விஜய் சேதுபதி – ப்ரோமோ!
Vijay Sethupathi Criticizes TTF Vasan: மக்களிடையே தமிழில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது 11வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இன்று (21/11/2025) வெளியான 4வது ப்ரோமோவில் விஜய் சேதுபதி, டிடிஃஎப் வாசன்-ஐ கண்டித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டு, அதிக டிஆர்பி கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது (Bigg Boss Season 10 Show) தமிழில் கடந்த 2026 ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் சிறப்பாக தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இருந்து தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக 11வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இன்னும் இந்த நிகழ்ச்சி முடிவடைய 3 முதல் 4 வாரங்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதில் கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க் (Contract Killadi Task) சிறப்பாக நடந்தது.
அதில் பிருத்வி, டிடிஃஎப் வாசன்-ஐ தனது கான்ட்ராக்ட் கில்லாடியாக தேர்ந்தெடுத்த நிலையில், பிருத்வியையே வாசன் சுட்டிருந்தார். அது பிக் பாஸில் சக போட்டியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அது குறித்து இன்று (21/11/2026) வெளியான 4வது ப்ரோமோவில் விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: இந்த வருடத்தை சிறப்பாக்கிய அன்பான ஃபேன்ஸ்.. சீன் பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சூர்யா!




டிடிஃஎப் வாசனிடம் கண்டித்து பேசிய விஜய் சேதுபதி:
இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, டிடிஃஎப் வாசனிடம், “கில்லர் டாஸ்கில் வாசன் நீங்கள் ஒரு ஸ்டேட்ஜி வைத்திருந்தீர்களே அது என்னது?” என கேட்டிருந்தார். அதற்கு டிடிஃஎப் வாசன், டூ ஆர் டை..மாதிரிதான் சார் நான் பிளான் பண்ணே” என கூறினார். உடனே விஜய் சேதுபதி, “எனது தலைக்கு மேல் கத்தி இருந்தது என்றால்.. அடுத்தது எப்படியும் அந்த கத்தி இறங்கதானே போகிறது. இது என்ன ஸ்டாடஜி. ஒப்பந்தத்தை மீறியிருக்கிறீர்கள்.. அப்போ உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்திருக்கீர்கள்.
இதையும் படிங்க: பிக்பாஸில் டிடிஎஃப் வாசனை கோபபட வைக்க நினைத்தது என்ன காரணத்திற்காக? முனியம்மாவை கேள்விகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி!
வெளியே சென்று பிருத்வி இடையே வம்பிழுக்க தெரிகிறது.. சண்டை போடா தெரிகிறது, கத்த தெரிகிறது, ஆனால் நீங்கள் செய்வது தவறு என ஏன் ஒத்துக்கொள்ள தெரியல. நான் மாஸாக விளையாடுகிறேன் என நினைத்து இதை செய்திருக்கீர்கள்.. ஆனால் அது உங்களுக்கு பேக் ஃபயர் ஆகிவிட்டது” என அதில் விஜய் சேதுபதி கூறியிருந்தார். இதற்க்கு வாசன் முகத்தை பாவமாக வைத்திருந்தபடி இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 76வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த பதிவு:
இந்த வாரத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஒரு எவிக்ஷன் உள்ளது. அதில் முகேஷ், பிருத்வி மற்றும் சாதிக்கா என மூவர் இருகிறார்கள். இந்த மூவரில் ஒருவர் இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது. அது யார் என பொறுத்திருந்து காணலாம்.