AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மலையாள சினிமாவில் மம்முட்டி போலீஸாக நடித்த இந்த உண்டா படத்தை பார்த்திருக்கீங்களா? உண்டா படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Unda Movie OTT Update | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் உண்டா. இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் மம்முட்டி போலீஸாக நடித்த இந்த உண்டா படத்தை பார்த்திருக்கீங்களா? உண்டா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
உண்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 18:22 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி (Actor Mammootty). இவர் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வபோது தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான படம் ஓ.எம். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் உண்டா. இந்தப் படத்தின் மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்த நிலையில் அந்தப் படம் ஓடிடியில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிகர்கள் ரஞ்சித், திலீஷ் போத்தன், ஷைன் டாம் சாக்கோ, அர்ஜுன் அசோகன், கலாபவன் ஷாஜோன்,
பகவான் திவாரி, ஓம்கார் தாஸ் மாணிக்புரி, ஜேக்கப் கிரிகோரி, ரோனி டேவிட், லுக்மான் அவரன், கோகுலன், அபிராம் ராதாகிருஷ்ணன், நௌஷாத் பாம்பே, சியென் ஹோ லியாவ், ஷஹீன் அகமது, பி. சாந்தனு, ஹர்ஷத் மற்றும் சோஹன் சீனுலால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

Also Read… அஞ்சாதே பாகம் 2 குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் மிஷ்கின்!

உண்டா படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

கேரளா போலீஸ் கேம்பில் இருந்து இந்தியாவில் வட மாநிலங்களுக்கு எலக்‌ஷன் டியூட்டிக்காக காவலுக்கு செல்கிறது ஒரு போலீஸ் குழு. அதில் ஒரு குழுவினருக்கு மம்முட்டி தலைமை ஏற்று செல்கிறார். அப்படி சென்ற இடத்தில் மாவோஸ்ட்களின் பகுதிக்கு எலக்‌ஷன் டியூட்டிக்காக சென்று இருக்கும் இவர்களுக்கு அங்கு என்ன எல்லாம் நடக்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை.

காவலர்களாக அதுவும் காவல்துறையில் கடைசிக்கட்டத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் என்ன எல்லாம் சிரமத்தை சந்திக்கிறார்கள் என்பதை மையமாக வைத்தே இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கி இருந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… முறைமாமன் கலாச்சாரம் குறித்து ராதிகா ஆப்தே சொன்ன சர்ச்சை கருத்து… கீர்த்தி சுரேஷின் ரியாக்‌ஷன் இதோ!

Follow Us