Anirudh: அவளுக்கென புதிதாய் மாறினோம்.. காவியா மாறனுடன் வீடியோ பகிர்ந்த அனிருத்!
Anirudh And Kavya Maran Video: தமிழில் சிறந்த இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் காவியா மாறனை பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த 2026 நவம்பர் 11ம் தேதியில் கிரீஸில் திருமணம் செய்துகொண்டார். அந்த விதத்தில் தனது மனைவி காவியா மாறனுடன் இருக்கும் இருக்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் மக்களிடையே சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவில் இவரின் இசையில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுள்ளார். இவர் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களில் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். இவரின் இசையில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர் 2 (Jailer 2). இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Director Nelson Dilipkumar) இயக்கியிருந்த நிலையில், மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியுடன் அனிருத், தனது திருமண அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இவர் சன் ரைஸஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் மேலாளரான காவியா மாறனை (Kavya Maran) காதலித்துவந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே 2026ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியில், கிரீஸ் நாட்டில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் குறித்த புகைப்படங்களை அனிருத் பகிர்ந்திருந்தார். அந்த விதத்தில் தற்போது, தன்னுடன் காவியா மாறன் இருக்கும் புதிய வீடியோ ஒன்றை அனிருத் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
காவியா மாறனுடன் இருக்கும் வீடியோவை அனிருத்:
இந்த வீடியோவில், அனிருத் மற்றும் காவியா மாறனுடன் இருக்கும் பபுகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அனிருத் இசையமைத்து பாடிய “அவளுக்கென” என்ற ஆல்பம் பாடலை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவில் அனிருத், “எனக்கு மிகவும் பிடித்த வகையான மேஜிக்” என அதில் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் வைரலாகிவருகிறது.
காவியா மாறனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த அனிருத்:
My favourite kind of magic ❤️ https://t.co/s1QGwUmMwe
— Anirudh Ravichander (@anirudhofficial) November 19, 2026
இசையமைப்பாளர் அனிருத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இசையமைப்பாளராக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் இறுதியாக ஜெயிலர் 2 படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்தே, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறனின் மகள் காவியா மாறனை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா சொன்ன சுவாரஸ்யமான விசயம்!
தற்போது திருமண கொண்டாட்டத்திற்காக அனிருத் மற்றும் காவியா மாறன் இருகிறார்கள். சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு 2026 நவம்பர் 21ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.