AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sreeleela: ஒரு கனவு நனவானது போல… ரஜினியுடன் தர்மன் படத்தில் பணியாற்றுவது பற்றி பேசிய ஸ்ரீலீலா!

Sreeleela on Rajinikanths Dharman Movie: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக பல்வேறு படங்களில் பணியடிவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் தமிழில் ஓ.எம் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இதற்கு பிறகு ரஜினியின் தர்மன் படத்தில் பணியாற்றிவரும் நிலையில், அது குறித்து தனது ஆர்வத்தை பகிர்ந்துள்ளார்.

Sreeleela: ஒரு கனவு நனவானது போல… ரஜினியுடன் தர்மன் படத்தில் பணியாற்றுவது பற்றி பேசிய ஸ்ரீலீலா!
ரஜினிகாந்தின் தர்மன் படம் பற்றி ஸ்ரீலீலாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Nov 2026 21:20 PM IST

தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் இளம் கதாநாயகியாக பேமஸானவர் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக பராசக்தி (Parasakthi Movie) என்ற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த நிலையில், இதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுடன் (Dhanush) நடித்துவந்த 2வது திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie) . இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்கியிருந்த நிலையில், தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் அவருடன் ஸ்ரீலீலா, சாய் பல்லவி மற்றும் மம்முட்டி போன்ற நடிகர்கள் இனைந்து நடித்துள்ளனர். இதில் தனுஷின் மனைவியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஓ.எம் படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில், ஸ்ரீலீலா பேசியிருந்தார். அதில் அவர், ரஜினிகாந்துடன் (Rajinikanth) தர்மன் படத்தில் (Dharman Movie) நடிப்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!

ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பேசிய ஸ்ரீலீலா:

அந்த நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என் திரை வாழ்க்கை முழுவதும் நான் இவர்களுடன் பணியாற்ற விரும்பினேன். இது ஒரு கனவு நனவானது போன்றது, மேலும் இந்தத் திட்டத்தை நான் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக வைத்திருக்கிறேன்.

இதையும் படிங்க: பக்கா ஆக்ஷன்… ஜப்பானில் பிரம்மாண்டமாக நடக்கும் சூர்யா48 பட ஷூட்டிங்! – வைரலாகும் போட்டோஸ்!

எனக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கும் இடையே நிறைய கான்வேர்ஷேன் நடந்திருக்கிறது. அதைப் பற்றி பேச ஆரம்பித்தால், நான் நிறுத்தவே மாட்டேன். தர்மன் பட ப்ரோமோஷனில் இதை பற்றி மேலும் பேசுவேன். உண்மையாகவே சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இது ஒரு கனவு நனவானது போன்றது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தர்மன் படத்தில் ஸ்ரீலீலா இணைந்தது குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துவரும் 173வது திரைப்படம்தான் தர்மன். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, சிம்ரன், ராசி கண்ணா, ஸ்ரீலீலா, நயன்தாரா, ராம் பொத்தினேனி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்தின் 3வது கட்ட ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us