AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பக்கா ஆக்ஷன்… ஜப்பானில் பிரம்மாண்டமாக நடக்கும் சூர்யா48 பட ஷூட்டிங்! – வைரலாகும் போட்டோஸ்!

Suriya48 Japan Shoot: தமிழில் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர்களில் பெயர்போனவர் சூர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக சீன் படமானது வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதன் பிறகு ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 48வது படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஜப்பானில் நடக்கும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

பக்கா ஆக்ஷன்… ஜப்பானில் பிரம்மாண்டமாக நடக்கும் சூர்யா48 பட ஷூட்டிங்! – வைரலாகும் போட்டோஸ்!
சூர்யா48 திரைப்படத்தின் ஜப்பான் படப்பிடிப்புImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Nov 2026 18:10 PM IST

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைத்துறையில் மிகவும் பிரம்மாண்டமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவர் இந்த 2026ம் ஆண்டில் மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் மொத்தமாக 3 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu), இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) மற்றும் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் (Scene Movie) என 3 படங்கள் வெளியாகியிருந்தது. இப்படங்கள் அனைத்தும் 2 மாத கேப்பில் வெளியான நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படங்கள் எல்லாமே ரூ 250 கோடிகளுக்கு மேல் சினிமாவில் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இதன் பிறகு ஜெய் பீம் பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் (T.J. Gnanavel) இயக்கத்தில் சூர்யா48 (Suriya48) படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துவரும் நிலையில், தற்போது படக்குழு முழுக்க ஜப்பான் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நா அது ப்ராங்க் கால்னு நினச்சேன்… நடிகை ஸ்ரீலீலா சொன்ன சுவாரஸ்யமான விசயம்!

ஜப்பானில் சூர்யா48 திரைப்படத்தின் ஷூட்டிங்:

நடிகர் சூர்யாவின் சூர்யா48 படத்தின் ஷூட்டிங் ஜப்பானில் உள்ள கியோட்டோ என்ற பகுதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறதாம். இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் படமாக அமைந்துள்ளது. இதில் நடிகர் சூர்யா மருத்துவராக நடித்துவருகிறாராம்.

மேலும் இப்படத்தில் அவருடன் நடிகை கயாடு லோஹர் இணைந்து நடித்துவருகிறார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இன்னும் சில மாதங்களுக்குள் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.

சூர்யாவின் 48வது படத்தின் ஜப்பான் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:

சூர்யாவின் இந்த 48வது படத்தை இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்க, காந்தாரா பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதில் சூர்யா, கயாடு லோஹர், பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: ஃபினாலே வாரப் போட்டியில் மற்றொரு டாஸ்க்.. அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!

இந்த படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இவர் ஏற்கனவே சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. அதே போல சூர்யா48 படத்திலும் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2027ம் ஆண்டின் கோடைக்காலத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us