பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் 400 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பயணிகளை தேடும் பணி தீவிரம்
Kodaikanal Mini Bus Accident : பழனி - கொடைக்கானல் மலைப்பாதையில் 24 பயணிகளுடன் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடைக்கானலில் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு பழனி திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல், நவம்பர் 27 : பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் 24 பயணிகளுடன் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து (Bus Accident) விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடைக்கானலில் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு பழனி திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து
கொடைக்கானல் – பழனி சாலையில் 400 அடி பள்ளத்தில் மினி பேரு்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் 20 பேர் பயணித்த நிலையில் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளங்கி என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பழனி திரும்பிக்கொண்டிருந்த நிலையில் சவரிக்காடு என்ற பகுதியில் பேருந்து வந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : திமுகவில் இணையும் முடிவில் செல்வப்பெருந்தகை? ஆதரவாளர்களிடம் கூறிய அந்த வார்த்தை.. என்ன நடக்கிறது காங்கிரஸில்!




திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும்போது விபத்து
பழனியை சேர்ந்த தம்பத்திக்கு கடந்த நவம்பர் 15, 2026 அன்று திருமணம் நடைபெற்ற நிலையில் மறுவீடு வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் பழனிக்கு 2 மினி பேருந்துகளில் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் 2வதாக சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. உடனடியாக விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு கொடைக்கானல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில், வனப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானல் 12 மைல் சுற்றுலாத் தலங்களில் பணிபுரியும் 8 ஊழியர்களை பணிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பார் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை – சிறைக்கு செல்லும்போது நிஷாந்த் பேச்சு
கொடைக்கானல் பகுதியில் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விபத்து ஏற்படாத வண்ணம் அரசு தலையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ரனர்.