AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம்!

Tiruvannamalai Special Buses : கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 19 Nov 2026 15:15 PM IST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வருகிற நவம்பர் 24- ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயரம் உள்ள மீது பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருநெல்வேலி மண்டலத்தில் இருந்து வரும் நவம்பர் 22- ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளன்று பௌர்ணமி கிரிவலம் மற்றும் தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி கோட்டம் சார்பில் வருகிற நவம்பர் 22- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23- ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, நாகர்கோவில் மற்றும் திருச்செந்தூர் ஆகிய முக்கிய பகுதிகளில் இருந்து 150 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு குழுவா செல்ல சிறப்பு பேருந்து

மேலும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் குழுவாக செல்ல விரும்பினால் அவர்களின் வசதிக்கு ஏற்ப ஒரு அரசு பேருந்தில் பயணிக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் அரசு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்படும். இதில், திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி மாவட்ட உதவி மேலாளர் ( வணிகம்- 9487599053), உதவி பொறியாளர் ( இயக்கம்- 9489052016), தென்காசி மாவட்ட உதவி மேலாளர் ( வணிகம்- 9487599080), உதவி பொறியாளர் ( இயக்கம்- 9487599083) என்ற தொலைபேசி எண்களில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக நடக்கும் கார்த்திகை தீபத்திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருவிழாவின் போது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டும் தீபத் திருநாளில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக நெய் கொள்முதல் செய்யப்பட்டு பிரம்மாண்ட துணியில் திரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தீப விழாவில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். அவர்களின் வசதிக்காக வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!

Follow Us