தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 20-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு முதலில் ‘ஓம்’ (Om) என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ‘ஓம் – சாப்டர் 1: உதிரம் – தி பிளட் வுட்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் புதிய தலைப்பு தற்போது ‘O.M – Operation Mole’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு மாற்றத்துக்குச் சென்சார் தொடர்பான சில சிக்கல்களே காரணம் என்று திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 'ஓம்' என்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சொல்லைப் பயன்படுத்துவதில் ஆட்சேபனைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தைப் படக்குழுவோ அல்லது சென்சார் வாரியமோ உறுதிப்படுத்தவில்லை. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் பல்லவி இதில் சிபிஐ அதிகாரியாக நடிப்பதாகவும், செம்மரக் கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் கதைக்களம் அமைந்துள்ளதாகவும் டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 20-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.