AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!

Kanyakumari Girl Missing : கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9- ஆம் வகுப்பு படி த்து வந்த 14 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது .

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!
மாயமான சிறுமி முத்து.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Nov 2026 14:29 PM IST

தமிழகத்தில் செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள் நெருங்கும் நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 வயதுள்ள சிறுமி மாயமாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரை கண்டுபிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள விடலம் உதயமார்த்தாண்டம் நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர், தனது மனைவி மற்றும் மகளுடன் குளச்சல் பயணிகள் விடுதி சந்திப்பு மற்றும் ஆவின் பாலகம் அருகே உள்ள சாலையோர பகுதியில் பசித்து வருகிறார். இவரது 14 வயது மகள் முத்து அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 15- ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்

அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் சிறுமி முத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்தப் பகுதியிலும், அக்கம், பக்கத்தினர், உறவினர் வீடுகளில் தேடத் தொடங்கினர். ஆனால், எங்கு தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்றதாக அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: வேலூரில் அதிர்ச்சி.. ரூ.6.5 கோடி ரயில்வே பொருட்கள் கொள்ளை.. முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது!

சிறுமி காணாமல் போயி 4 நாள்கள் ஆகும் நிலை

இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் தங்களது மகளை என்னும் கடத்தி சென்றிருக்கலாமா என்ற சந்தேகத்தில் இது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மாயமாகி இன்றுடன் 4 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அவரை விரைந்து கண்டுபிடிப்பதற்காக மாவட்ட எஸ்பி உத்தரவின் அடிப்படையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பகுதி.

2 தனிப்படைகள் அமைப்பு- தேடுதல் வேட்டை

குளச்சல் பேருந்து நிலையம், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்ற கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயி 40 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது இந்த சிறுமி மாயமாகி இருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!

Follow Us