Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Crime

Crime

 

பல்வேறு உலக நாடுகளில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருகிறது. நம் இந்தியாவில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கொலை செய்துவது, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் நின்ற பாடில்லை. எனவே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை எனவிம் சமூக ஆர்வலர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

ஆண் நண்பருடன் பேசிய பெண்.. ஆத்திரத்தில் குத்திக் கொன்ற காதலன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்!

Kanchipuram Murder : காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பருடன் பெண் தொடர்ந்து பேசி வந்ததால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணை, அவரது காதலன் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்.. குளித்தலையில் அதிர்ச்சி..

Kulithalai Crime News: கரூர் மாவட்டத்தில் குளித்தலையில், கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 20, 2025) அதிகாலை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பாளையங்கோட்டை: பழைய ரூ.100 நோட்டு செல்லுமா? செல்லாதா? ரேஷன் கடையில் வாங்க மறுப்பு

Palayankottai Ration Shop Dispute: பாளையங்கோட்டை கூட்டுறவு நியாயவிலை கடையில் பழைய 100 ரூபாய் நோட்டை ஏற்க மறுத்ததால் வாடிக்கையாளர் ரத்தினகுமார் தாக்கப்பட்டார். விற்பனையாளரின் தகாத வார்த்தைகள் மற்றும் பணத்தை முகத்தில் வீசிய செயல் கண்டனத்திற்குரியது. ரத்தினகுமார், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல்: ஆசிரியரை மிரட்டிய சிறுவனின் தற்போதைய நிலை தெரியுமா?

Dindigul ATM Robbery: திண்டுக்கல் செம்பட்டி அருகே ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பள்ளிக் காலத்தில் ஆசிரியரை மிரட்டிய வீடியோ மூலம் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்.

காதலுடன் செல்போனில் பேச்சு: தாலியை கழற்றி வெளியேறிய புதுப்பெண்: கடலூரில் பரபரப்பு

Cuddalore New Couple: கடலூரில் திருமணமான 10 மாதங்களில் தாலியை கழற்றி விட்டுத் வெளியேறிய பெண் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவனை தவிர வேறொருவருடன் செல்போனில் பேசியது காரணமாக தகராறு ஏற்பட்டது. தந்தை புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் பெண் கோவையில் வேலை செய்வது தெரியவந்தது.

அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.. சிபிஐ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

Sivaganga Ajith Kumar Custodial Death : அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறை வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகன பதிவெண் பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், 2 போலி நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது. அஜித் குமாரை அழைத்து சென்ற டெம்போ வாகனத்தில் இருந்து மதுபாட்டில்கள், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரசவமா? பயத்தில் மர்மமான இளம்பெண்.. அடுத்து என்ன? ஈரோட்டில் நடந்த சம்பவம்!

Erode Crime News : ஈரோடு மாவட்டத்தில் பிரசவத்திற்கு பயந்து இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்கள் காணாமல் போன நிலையில், அதன்பிறகு அவர் வீடு திரும்பி இருக்கிறார். இதுபோன்று ஏன் அந்த பெண் செய்தார் என்ற விவரத்தை பார்ப்போம்.

ராமநாதபுரம்: பிள்ளைகள் முன்பு வீடு புகுந்து பெண் கொலை: குடும்ப மோதலா? வேறு காரணமா?

Woman Brutally Killed: ராமநாதபுரம் மணப்பாடையைச் சேர்ந்த ஜெர்மின், பிரிந்த கணவரிடமிருந்து தனியாக வசித்து வந்தார். முகமூடி அணிந்த இருவர் வீடு புகுந்து ஜெர்மினை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். கணவர் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் வரதட்சணை கொடுமை: அடித்து துன்புறுத்திய காவலர் கணவர் கைது..!

Madurai Policeman Arrested: மனைவியை வரதட்சணை கேட்டு தாக்கிய காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்க பிரியா தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்; அவரது கணவரின் கொடுமை விவரிக்கப்பட்ட ஆடியோவொன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது.

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்.. 3 பேர் கைது..

Tiruvarur School incident: திருவாரூர் பள்ளியில் மனிதக்கழிவு கலந்த குடிநீர், சமையல் பொருள் சேதம் உள்ளிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. போலீசார் நடவடிக்கை எடுத்து விஜயராஜ், காளிதாஸ், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

‘சுட்டுக் கொல்லனும்’ திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்… தாய் கண்ணீர்மல்க பேட்டி!

Tiruvallur Crime News : திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க வேண்டும் என தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். மேலும், அந்த நபரை சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மீண்டும் வரதட்சணை.. பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவன்.. பகீர் பின்னணி!

Madurai Woman Dowry Harassment Case : மதுரையில் ஆசிரியர் ஒருவர் தனக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் கணவர் தாக்கியதில், அப்பெண் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் பள்ளி மாணவன் விபரீத முடிவு… பேருந்துகள் தீக்கிரை..! போராட்டத்தால் பரபரப்பு

Tamil Nadu School Student Suicide: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 10ம் வகுப்பு மாணவன் கவின் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கல்வி ஆசிரியரின் திட்டு காரணமாக மன உளைச்சலில் மாணவன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லிவ் இன் பார்ட்னரை கொன்ற இளைஞர்.. துடிதுடித்து இறந்துபோன பெண்.. ஆந்திராவில் ஷாக்!

Andhra Pradesh Crime News : ஆந்திராவில் லிவ் இன் பார்ட்னரை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட காதலன் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை, அவரது காதலன் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிட்னி விற்பனை மோசடி.. நாமக்கல்லில் அரங்கேறும் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி!

Namakkal Kidney Scam : நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி விற்பனை மோசடி நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்து வருவதாக தெரிகிறது. சிறுநீரகங்களுக்கு ரூ.2 முதல் 3 லட்சம் வரை தருவதாக கூறி, இந்த மோசடி அரங்கேறி வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.