AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. தானும் தூக்கிட்டு தற்கொலை!

Young Man Stabbed College Student and Killed Himself | வேலூரில் 19 வயது இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய நிலையில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். காதல் விவகாரம் காரணமாக இது நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்.. தானும் தூக்கிட்டு தற்கொலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Feb 2026 08:40 AM IST

வேலூர், பிப்ரவரி 26 : வேலூரின் (Vellore) தொரப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 25, 2026) மதியம் 12 மணி அளவில் ராம்சேட் நகர் பகுதியில் கல்லூரிக்கு நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த நபர் ஒருவர் மாணவியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். பிறகு மாணவியின் வயிற்றில் குத்திய அந்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார்

மாணவி கத்தியால் குத்தப்பட்டதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியது 19 வயது விக்னேஷ் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : வளைவில் திரும்பிய பேருந்து… தவறி விழுந்த மாணவர்.. தேர்வெழுத சென்றபோது பரிதாபம்!

தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர்

மாணவியை கத்தியால் குத்திய பயத்தில் அந்த இளைஞர் தனது வீட்டில் தூக்கிட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : நான் வீட்ல இருப்பேன்.. இல்ல ஆபீஸ்ல இருப்பேன்.. விஜய்யை அட்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஜூலி!

அந்த இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்திருக்கலாம் என்றும், தன்னுடன் பேச மறுத்த நிலையில் அவர் மாணவியை கத்தியால் குத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us