AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்வு அறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!

10th Standard Girl Gave Birth To Baby Boy | மத்திய பிரதேசத்தில் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த 10 ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்வு அறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 16:11 PM IST

போபால், பிப்ரவரி 27 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், போபால் (Bhopal) பகுதியில் தேர்வின் போது 10 ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வின் போது மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், கழிவறையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்வின் போது குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி

மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது தேர்வு அறையில் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த மாணவி  கழிவறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அந்த மாணவி கழிவறையில் இருந்து மீண்டும் தேர்வு அறைக்கு வராத நிலையில், அந்த மாணவியின் பெண் தோழிகள் சிலர் மற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க : திருமண வரவேற்பில் மணமகளை துப்பாக்கியால் சுட்ட நபர்.. காதல் விவகாரத்தில் கொடூர செயல்!

கழிவறையில் ஆண் குழந்தை பெற்ற மாணவி

அவர்கள் கழிவறைக்கு அருகே சென்றபோது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது தான் கழிவறையில் மாணவி ஆண் குழந்தை பெற்றெடுத்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்த மாணவியும், குழந்தையும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மாணவி 34 வாரங்கள் கர்ப்பமாக இருந்ததும், குழந்தை முன்கூட்டியே அதாவது 8 மாதங்களிலே பிறந்ததும் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த மாணவி

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியிடம் விசாரணை மேற்கொண்டபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, நடன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாணவிக்கு ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த மாணவன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியே யாரிடமும் கூற கூடாது என்றும் அந்த மாணவர் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us