AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

Female Devotee Bite By Snake In Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று (பிப்ரவரி 22, 2026) சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெண் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு!
பெண் பக்தரை பாம்பு கடித்தது
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Feb 2026 14:52 PM IST

திருப்பதி, பிப்ரவரி 23: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (Tirupati Elumailayan Temple) சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தரை பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்த அந்த பெண் தற்போது நலமுடன் உள்ளதாக தேவஸ்தானம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருப்பதியில் பக்தருக்கு சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த போது பாம்பு கடித்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பதியில் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

ஆந்திர பிரதேச (AP – Andhra Pradesh) மாநிலம் திருப்பதியில் (Tirupati) உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இந்த கோயிலுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க : லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

அந்த வகையில் தெலங்கானா மாநிலம் பூபல்பள்ளியை சேர்ந்த மௌனிகா என்ற 27 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்துள்ளார். சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுக்கொண்டு இருந்த அவர், சுவாமி தரிசனத்திற்கு முன்னதாக தனது கால்களில் மஞ்சள் தேய்த்துள்ளார். அப்போது மௌனிகாவை பாம்பு கடித்துள்ளது.

எந்த வித ஆபத்தும் இன்றி நலமுடன் இருக்கும் பெண்

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான் போர்டு உறுப்பினர்கள் அந்த பெண்ணை உடனடியாக அருகில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், எந்த வித ஆபத்தும் இன்றி அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில் அந்த பெண் எந்த வித ஆபத்தும் இன்றி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தேவஸ்தானம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.