AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!

Doctors Sewed Up Woman Stomach With Scissors | கேரளாவை சேர்ந்த உஷா என்ற பெண் அரசு மருத்துவமனையில் கர்ப்ப பை அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நிலையில், அவரது வயிற்றில் மருத்துவர்கள் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிசத்திற்கு வந்த சம்பவம்!
பாதிக்கப்பட்ட பெண் உஷா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Feb 2026 13:17 PM IST

திருவனந்தபுரம், பிப்ரவரி 21 : கேரள (Kerala) மாநிலம், ஆலப்புழா (Alappuhza), புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப். 51 வயதாகும் இவர், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகிறார். 2021 ஆம் ஆண்டு ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உஷாவுக்கு கர்ப்ப பை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது முதலே உஷாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் செய்துள்ளார். இருப்பினும் அவருக்கு வயிற்று வலி குறையாமல் இருந்துள்ளது.

உஷாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

தொடர் வயிற்று வலி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு வழங்கப்பட்ட மாத்திரை மருந்துகளை உஷா எடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக அவரது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் சிறுநீரில் ரத்தம் வெளியேறியதால் அதிர்ச்சி அடைந்த அவர், அது தொடர்பாக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இதையும் படிங்க : 2 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. சந்தேகத்தில் வெறிச் செயல்!

10 செ.மீ நீளமுள்ள கத்தரிக்கோல் வயிற்றில் இருந்து கண்டுபிடிப்பு

அதாவது உஷாவின் வயிற்றை ஸ்கேன் செய்தபோது 10 செ.மீ நீளமுள்ள கத்தரிக்கோல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான உஷா, ஸ்கேன் பரிசோதனை முடிவுகளை எடுத்துக்கொண்டு தான் முன்பு அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் கத்தரிக்கோலை எடுத்துவிடலாம் என்றும், அது குறித்து வெளியே யாரிடமும் கூட வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், இந்த விவகாரம் எப்படியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : கட்டாய உடலுறவு.. இளம் பெண்ணை சித்ரவதை செய்து கொன்ற காதலன்.. பகீர் சம்பவம்!

மேலும் உஷா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று கூறி கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.