AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தின் வருவாயை பெருக்க மெகா பிளான்.. மான்டேக் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட அதிரடிக் குழு அமைப்பு!

Tamil Nadu Revenue Increase Committee Formed: தமிழகத்தின் வருவாயை பெருக்குவதற்காக பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த குழுவானது வருவாய் தொடர்பான அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளது.

தமிழகத்தின் வருவாயை பெருக்க மெகா பிளான்.. மான்டேக் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட அதிரடிக் குழு அமைப்பு!
தமிழக வருவாயை பெருக்க குழு அமைப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Jul 2026 06:26 AM IST

தமிழகத்தின் மாநில வருவாயை அதிகரிப்பதற்காக மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மான்டேக் சிங் அலுவாலியா பொருளாதார நிபுணர் ஆவார். மத்திய திட்டக் குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை வருகிற ஆகஸ்ட் 5- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கவும், அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மான்டேக் சிங் தலைமையிலான குழு வரி மற்றும் வரியில்லா வருவாயை பெருக்குவதற்காக கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை தமிழக அரசுக்கு வழங்கி அறிவுறுத்த உள்ளது.

3 மாதங்களில் அரசிடம் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மான்டேக் தலைமையிலான குழு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த குழுவானது 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டி வருவாயை பெருக்குவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!

  • கே. பி. கிருஷ்ணன்.
  • அரபிந்த் மோடி.
  • நஜிப் ஷா ( ஐ. ஆர். எஸ். ஓய்வு).
  • எம். ஏ. சித்திக் ஐ. ஏ. எஸ்.
  • சுரேஷ் பாபு ஆகியோர் அடங்குவர்.

தமிழகத்தின் மொத்த வருவாயை அதிகரிக்க

மாநிலத்தின் மொத்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அதனை மேம்படுத்துவது குறித்தும் கொள்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது. மேலும், தமிழகத்தில் வரி ஏய்ப்பு, அரசின் நிர்வாக செயல் திறனில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள், மதுபானங்கள் மீதான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, அதன் மூலமாக கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசுக்கு இந்த குழுவானது பரிந்துரை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!

Follow Us