மாணவரின் கண்ணீர் வீடியோ – சமூகநீதி நாளில் சமூக அநீதியா?- உதயநிதி கண்டனம்
Udhayanidhi Criticizes TVK Government : அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை கிடைக்காமல் கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக பாரதிதாசன் என்ற மாணவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியீட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு சமூகநீதி நாளில் சமூக அநீதியா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 17 : அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை கிடைக்காமல் கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக பாரதிதாசன் என்ற கண்ணீர் மல்க வீடியோ வெளியீட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் தவெக அரசிற்கு கண்டனம் என்று தெரிவித்த அவர், மாணவன் பாரதிதாசனின் ஆராய்ச்சி படிப்பு தொடர தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர் பாரதிதாசனின் வீடியோவை குறிப்பிட்டு உதயநிதி கண்டனம்
இதுகுறித்து அவர் தனது எகஸ் பதிவில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.




இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
மேலும், சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோஃபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே…
— Udhay (@Udhaystalin) September 17, 2026
அவரது பதிவில், மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் – அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : நவோதயா பள்ளிகளுக்கு முட்டுக்கட்டை?.. “3 மாசம் தான் டைம்!”.. தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்!!
மாணவர் பாரதிதாசன் தற்போது வெளியிட்ட விடியோவில், ஏப்ரல் மாதத்தில் இருந்து, உதவித் தொகைக் கேட்டு வருகிறேன். ஆனால், இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலையிலிருந்தே வெளியேற்றும் நிலை உருவாகியிருக்கிறது. அரசிடமிருந்து தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால், உதவித் தொகை மட்டும் இன்னும் வரவில்லை. ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கிய விவரங்கள் குறித்து, கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். இவையெல்லாம் ஆராய்ச்சிக்காகத்தான் வாங்கப்பட்டதா என்று? கேட்டிருக்கிறீர்கள். என்னைப் படிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா என கண்ணீருடன் விடியோ வெளியிட்டிருந்தார்.