ஆளுங்கட்சியின் இரட்டை வேடம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை மற்றும் மதுரையிலும் மாணவ அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை, ஜூலை 22 : டெல்லியில் நீட் தேர்வு முறைக்கேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் மதுரையிலும் மாணவ அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவ அமைப்பினர் கைது
இந்த நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மதுரையில் தமுக்கம் மைதானம் அருகேயேும் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவ அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனங்களில் அடைத்தனர். இதனால் இந்த விவகாரம் தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ளது.




இதையும் படிக்க : பெரம்பூர் தொகுதியை விட்டு கொடுத்தவருக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி.. முதல்வர் விஜய் கெளவிப்பு!
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில்…
— Udhay (@Udhaystalin) July 21, 2026
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னையின் பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மாணவ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவ அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் சோஃபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
இதையும் படிக்க : விஜய் தலைமை மீது அதிருப்தி? தவெகவில் இருந்து விலகிய நிர்வாகிகள்.. அதிமுகவில் திடீர் சேர்க்கை!
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, சோஃபா மாடல் அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.